Tamil Nadu Cyclone Warning Latest Update | தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தெற்கு அந்தமான் அதனையொட்டிய கடல் பகுதியில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சி, அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்!
வட மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சி இப்போது தெற்கே நகர்ந்து அங்கு நீடித்துக் கொண்டிருந்த இன்னொரு காற்று சுழற்சியுடன் இணைந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு அருகே இப்போது நிலை கொண்டிருக்கிறது. இதனால் ராமேஸ்வரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. கன்னியாகுமரி, தனுஷ் கோடி ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த மேலடுக்கு சுழற்சி புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் இதன் காரணமாக அதிக குளிர் நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் இருக்கும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்போது கடலூர், தஞ்சாவூர், நாக்கப்பட்டனம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த நிலை வரும் 27 ஆம் தேதி வரை நீடிக்கும். புயல் உருவானால் டெல்டா மாவட்டங்களை நோக்கி வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் - அரியலூர் அல்லது கடலூர் - புதுச்சேரி இடையே இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை பொறுத்து, கரையை கடக்கும் இடம் முடிவாகும்.
மாமல்லபுரம் அருகே கரையை கடக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னைக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மிக முக்கியமான நாட்கள். இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனையொட்டி அரசு சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புயல் உருவானால் அதனை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னையில் பேரிடர் மேலாண்மை மையத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் படிக்க | மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7வது நாளாக நடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ