இளையோர் உலகக் கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை!

இளையோர்கான உலகக் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ பரிசுகளை அறிவித்துள்ளது.

Last Updated : Feb 3, 2018, 03:42 PM IST

Trending Photos

இளையோர் உலகக் கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை! title=

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி அங்குள்ள மவுன்ட் மவுங்குனியில் இன்று நடந்தது. 

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது. ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சி காரணமாக, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டதால், இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 

இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவரில் 220 ரன் எடுத்து அபார வெற்றியடைந்தது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி, நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது. உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுகளை அறிவித்துள்ளது. 

தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தலா 20 லட்சம், அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News