7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம்

குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ .1.25 லட்சம் வரை இருக்கலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2021, 12:52 PM IST
  • அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த ஒரு முக்கிய செய்தி.
  • குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது.
  • இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன.
7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம் title=

7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த ஒரு முக்கிய செய்தியை இந்த பதிவில் காணலாம். ஓய்வூதிய விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விதியின் கீழ், கணவன்-மனைவி இருவரும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து (Central Government Employees), மத்திய சிவில் சர்வீசஸ் (CCS-பென்ஷன்), 1972 விதிகளின் கீழ் கவர் செய்யப்பட்டிருந்தால், துரதிஷ்டவசமாக அவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ .1.25 லட்சம் வரை இருக்கலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. இது குறித்து உருவாக்கப்படுள்ள புதிய விதிகள் என்ன என்பதை காணலாம்.

ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம் 

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான புதிய விதிகள்

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்கிறது. மத்திய சிவில் சர்வீசஸ் (Central Civil Services, 1972) இன் 54 வது விதியின் துணை விதி (11)-ன் கீழ், கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது குழந்தைகளுக்கு தாய் தந்தை என இருவருக்குமான ஓய்வூதியமும் கிடைக்கும்.

விதிகளின் படி, பெற்றோரில் ஒருவர் சேவையின் போது அல்லது ஓய்வுக்குப் பிறகு இறந்தால், ஓய்வூதியம் உயிருடன் இருக்கும் பெற்றோர் இறந்தவரின் அதாவது வாழ்க்கைத் துணைக்கு கிடைக்கிறது. இருவரும் இறக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

முன்னர் இருந்த ஓய்வூதிய விதி என்ன?

முன்பு, ஓய்வூதியம் (Pension) பெறுபவர்கள் இருவரும் இறந்திருந்தால், 54 வது விதி, துணை விதி (3)-ன் கீழ், குழந்தை அல்லது குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய இரண்டு ஓய்வூதியத்தின் வரம்பு ரூ. 45,000 ஆக இருந்தது. விதி 54 துணை விதி (2)  இன் படி, குடும்பத்தின் இரண்டு ஓய்வூதியங்களும் மாதம் ரூ .27,000 என்ற அளவில் பொருந்தும். ஆறாவது ஊதியக் கமிஷனின் படி, சிசிஎஸ் விதிகளின் விதி 54 (11) ன் கீழ் அதிக ஊதியம், மாதம் ரூ. 90,000-ன் 50 சதவிகிதம் மற்றும் 30 சதவிகிதம் என்ற விகிதத்தில் இருக்கும்.

ஓய்வூதியத்தில் புதிய விதி என்ன

7 வது சம்பள கமிஷனுக்குப் (7th Pay Commission) பிறகு, அரசு வேலைகளில், தொகை அளவு திருத்தப்பட்டு, மாதத்திற்கு 2.5 லட்சம் ஆக்கப்பட்டது. அப்போதிருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திலும் மாற்றம் ஏற்பட்டது. ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியர் நலத்துறையின் (DoPPW) அறிவிப்பின் படி, இரண்டு வரம்புகள் மாற்றப்பட்டன. இவை இப்போது, மாதத்திற்கு ரூ .1.25 லட்சமாகவும், ரூ .75,000 ஆகவும் திருத்தப்பட்டுள்ளன.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News