7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு மீண்டும் ஊடகங்களில் பரவி வருகிறது. புதிய அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிகிறது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபப்டி முடக்கப்பட்டது. எனினும், நிலைமை சற்று மேம்பட்டவுடன், முடக்கம் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் ஊழியர்களின் அகவிலைப்படியில் அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை-யை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், அந்த தொகை கொரோனா நிவாரண பணிகள் மற்றும் ஏழை எளியவர்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கான நலப்பணிகளில் செலவழிக்கப்பட்டதால், நிலுவைத் தொகையை வழங்குவதற்கான எண்ணம் இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
தற்போது இதில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக, 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான விவகாரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நிதி இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு
ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் (பணியாளர் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி முந்தைய ஊடக அறிக்கைகள், கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளதாகவும், ஆனால் இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் தெரிவித்தன. அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், எனினும், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறையில் வழங்க வேண்டும் என தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் ஜெசிஎம்-இன் கூட்டுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது 18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலுவைத் தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை.
ஜெசிஎம்-இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா, லெவல்-1 ஊழியர்களின் டி ஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளதாக முன்னர் கூறியிருந்தார். லெவல்-13 (7வது சிபிசி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு), ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும்.
செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR