7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை

சமீபத்தில், ஓய்வூதியதாரர்கள் நிலுவைத் தொகையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று கோரி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 04:58 PM IST
7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை title=

7th Pay Commission latest news today: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு தொடர்ந்து பல நல்ல செய்திகளை வழங்கி வருகிறது. ஜூலை முதல், அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து மாநில ஊழியர்களின் அகவிலைப்படியும் அதிகரித்துள்ளது. எனினும், நிலுவைத் தொகைக்கான கோரிக்கை தொடர்பாக ஊழியர் சங்கங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

சமீபத்தில், ஓய்வூதியதாரர்கள் நிலுவைத் தொகையில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலையிட வேண்டும் என்று கோரி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இப்போது மோடி அரசு இந்திய ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியையும் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு 6 வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகவிலைப்படி 25%அதிகரித்துள்ளது, நிலுவைத்தொகையும் கிடைக்கும்

ஆறாவது ஊதியக்குழுவின் விகிதத்தின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசின் இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு (Central Government employee Indian Railways ) அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 1 ஜூலை 2021 முதல் அமல்படுத்தப்பட்டது.

ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ

அரசின் இந்த முடிவால், ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும். அதிகரிக்கப்பட்ட தொகை செப்டம்பரில் ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும். இதில் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ஊழியர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான அரியர் தொகையையும் பெறுவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி

ஜூலை மாதம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 11 சதவீதம் அதிகரித்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆகஸ்டில், மத்திய அரசு தன்னாட்சி அமைப்புகளின் (Central Autonomous Bodies) ஊழியர்களின் அகவிலைப்படியை 25 சதவிகிதம் அதிகரித்தது. கொரோனா தொற்றுநோயின் காரணத்தால், ​​மே 2020 இல் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இப்போது அனைத்து துறைகளின் ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கமும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றது.

முந்தைய டிஏ விகிதம் 164% ஆக இருந்தது

இந்திய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் (Executive Director, Pay Commission – II ) எம்.கே.குப்தா அளித்த உத்தரவின் படி, இந்த ஊழியர்களுக்கு, 1 ஜனவரி 2020, 1 ஜூலை 2020 மற்றும் 1 ஜனவரி 2021 ஆகியவற்றுக்கான உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. இந்த ஊழியர்களின் டிஏ-வை 189 சதவீதமாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது ஜூலை 1, 2021 முதல் பொருந்தும்.

ஆறாவது ஊதியக்குழுவின் விகிதத்தில் சம்பளம் பெறும், அனைத்து இந்திய ரயில்வே ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! முக்கிய தகவல் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News