பீர் குடிங்க சார் உடம்பு நல்லா இருக்கும்- ஆய்வில் வெளியான தகவல்

பீர் குடிப்பதன் மூலம் நீரிழிவு நோய், இருதய நோயிலிருந்து தப்பலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 6, 2022, 01:34 PM IST
  • பீர் குடிப்பதால் நன்மைகள் கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது
  • 4 வாரங்கள் இந்த ஆய்வு நடந்தது
பீர் குடிங்க சார் உடம்பு நல்லா இருக்கும்- ஆய்வில் வெளியான தகவல் title=

மது நாட்டுக்கு வீட்டுகு உயிருக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் போன்ற வாசகங்களை மது பாட்டிலில்  ஒட்டப்பட்டிருந்தாலும், பலர் மது குறித்து விழிப்புணர்வு செய்தாலும்,மதிப்பிரியர்களின் அளவு அதிகமாகவே இருக்கிறது. அதுவும் தற்போதைய காலத்தில் கொண்டாட்டமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் அந்த சூழலில் மது தவறாமல் இடம்பெறுகிறது.

இதனால் பலரது உடல்நல ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு பல குடும்பங்கள் நிற்கதியாய் நிற்கின்றன. எனவே மதுப்பழக்கத்திலிருந்து அனைவரும் வெளியே வர வேண்டுமென்று பலர் ஏங்கிவருகின்றனர்.

Beer

அதேசமயம், எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் எந்தவித பிரச்னையும் இல்லை என கூறி மதுப்பிரியர்கள் மதுப்பழக்கத்துக்குள் இருக்கின்றனர். அதிலும், பிராந்தி, விஸ்கி போன்றவைகளை குடித்தால்தான் உடலுக்கு கேடு. பீர், ஒயின் வகைகளை குடிப்பதால் உடலுக்கு அப்படி ஒன்றும் பாதிப்பில்லை எனவும் மதுப்பிரியர்கள் கூறுவது வாடிக்கை.

இந்நிலையில் பீர் குடித்தால் நீரிழிவு நோய், இருதய நோயிலிருந்து தப்பலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது. வடக்கு போர்ச்சுக்கல்லில் இருக்கும் போர்ட்டோ நகரில் ஆராய்ச்சி மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது.

Beer

இங்கு, 23 வயதில் இருந்து 58 வயதுவரை உள்ள சிலருக்கு ஆல்கஹால் இல்லாத பீர் தொடர்து 4 வாரங்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு திறன் மேம்பட்டது தெரியவந்தது.

இந்த நுண்ணுயிரிகளானது நீரிழிவு, இருதய நோய் போன்றவைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் இந்த நுண்ணுயிரிகளின் திறன் மேம்படுவதற்கு ஆல்கஹால் இல்லாத பீரை குடிக்க வேண்டும். 

மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: FD விகிதங்களை உயர்த்தியது வங்கி

மேலும் ஆல்கஹால் இல்லாத பீரை குடிப்பதன் மூலம் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை அதிகரிக்கிறது என ஆராய்ச்சி செய்தவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி ரெட் ஒயினைப்போல், பீரிலும் நன்மை கொடுக்கும் பாலிபினாக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News