ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart's biggest sale) நிகழ்வும் பிளஸ் பயனர்களுக்காக (Plus Members) தொடங்கியுள்ளது. நாளை முதல் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு கிடைக்கும். பிளிப்கார்ட் பல சாதனங்களில் வங்கி, பரிமாற்றம், கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் ப்ரீபெய்ட் சலுகைகளையும் அறிவித்துள்ளது.
பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையில் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள் குறித்து பார்ப்போம்:
கூகுள் பிக்சல் 4A
பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் சலுகைகள் இல்லாமல் பிக் பில்லியன் டேஸ் விற்பனை முழுமையடையாது என்றே கூறலாம். இந்த ஆண்டு, ஃப்ளிப்கார்ட்டின் பண்டிகை சீசன் விற்பனை கூகுள் பிக்சல் 4a மாடல் ரூ. 25,999 (ஒரிஜினல் விலை ரூ. 31,999) விலையில் வாங்கலாம். ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் 10 சதவிகித உடனடி தள்ளுபடியை செலுத்துவதன் மூலம் நீங்கள் இன்னும் மலிவான விலையில் பெறலாம்.
போகோ எக்ஸ் 3 ப்ரோ (ரூ 16,999)
இந்த வாரம் Flipkart Big Billion Days 2021 விற்பனையில் போகோ எக்ஸ் 3 ப்ரோ (6 ஜிபி, 128 ஜிபி) மாடல் போன் ரூ. 16,999 (ஒரிஜினல் விலை ரூ 23,999) விலையில் பெறலாம். ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்து மேலும் சலுகை பெறலாம் அதிகபட்சமாக ரூ. 15,800 வரை தள்ளுபடி கிடைக்கும். போகோ எக்ஸ் 3 ப்ரோ 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 20 மெகாபிக்சல் முன் கேமராவை கொண்டுள்ளது.
ALSO READ | Great Indian Festival Sale: கவர்ச்சிகரமான சலுகை - தள்ளுபடிகள் குறித்து விவரம்
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் (ரூ. 19,999)
இந்த வாரம் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையின் போது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ரூ. 19,999 (ஒரிஜினல் விலை ரூ. 24,999) தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 சிப் (ரூ. 80,000)
ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஆப்பிளின் மேக்புக் ஏர் M1 சிப் மாடலை ரூ. 80,000 (ஒரிஜினல் விலை ரூ. 92,900) க்கு வாங்கலாம்.
ALSO READ | Flipkart வழங்கும் அதிரடி சலுகை: Motorola போன்களில் ரூ. 6000 வரை தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR