புதுடெல்லி: வீட்டின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Shastra) பல விதிகள் கூறப்பட்டுள்ளன. உங்களுக்கு பல வசதிகள் உள்ள போதிலும், உங்கள் வீட்டில் மன அழுத்தம் நீடித்தாலோ, பல முயற்சிகள் செய்த பிறகும் உங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றாலோ, குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டாலோ, உங்கள் வீட்டில் வாஸ்து (Vastu) தோஷம் இருக்கிறதா என நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நீங்கள் ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் சரி, அல்லது ஒரு ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தாலும் சரி, இந்த வாஸ்து குறிப்புகள் (Vastu Tips) உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ALSO READ: Best Vastu Tips : திசைகளின் வாஸ்து மந்திரங்களால் வெல்லப்படும், எப்படி தெரியும்?
வீட்டின் வாஸ்து எப்படி இருக்க வேண்டும்
வீட்டின் வாஸ்து வீட்டில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரையும் பாதிக்கிறது. குழந்தைகளின் கல்வியில் இருந்து, ஒவ்வொரு உறுப்பினரின் ஆரோக்கியமும் வாழ்க்கையும் ஒரு விதத்தில் வாஸ்துவையும் சார்ந்துள்ளது. வீட்டின் வாஸ்து எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (Vastu Tips For Home):
1. வீடு தொடர்பான கட்டடக்கலை வாஸ்து விதிகளின் படி, வீட்டின் கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு பூமி பூஜை செய்வது அவசியமாகும். இதற்குப் பிறகு, எவை எங்கு இருக்க வேண்டும், எதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.
2. மூன்று சாலைகள் அல்லது நான்கு சாலைகள் கூடும் இடங்களில், வெறிச்சோடிய இடங்களில், நகரம் அல்லது கிராமத்திற்கு வெளியே, பாழடைந்த இடங்களில், சத்தம் அதிகமாக உள்ள இடங்களில், சட்டவிரோத செயல்கள் நடக்கும் இடங்களில் வீட்டைக் கட்டக் கூடாது. வீதி அல்லது சாலை முடியும் இடத்தில் வீட்டைக் கட்டுவதும் அத்தனை நல்லதல்ல.
3. வீடு கட்டும் போது பழைய மரம், பழைய செங்கல் அல்லது பழைய கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், உங்கள் வீட்டில் மூலைகளில் குப்பைகளை வைக்க வேண்டாம்.
4. வீட்டின் பிரதான கதவை வட கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் ஏதேனும் ஒன்றில் வைப்பது நல்ல பலன்களைத் தரும். பிரதான வாயிலுக்கு முன்னால் படிக்கட்டுகள் இருக்கக்கூடாது.
5. வீட்டில் கட்டப்படும் படிக்கட்டுகளுக்கு தெற்கு, மேற்கு அல்லது தென்மேற்கு திசைகள் ஏற்ற திசைகளாகும். ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் கட்டப்படும் படிக்கட்டுகளால் வாஸ்து தோஷம் உண்டாகி, பொருளாதார இழப்பு, நோய் மற்றும் பல வகையான தடைகள் ஏற்படுகின்றன. படிக்கட்டுகள் எப்போதும் கடிகார திசையில் (Clockwise) இருக்க வேண்டும்.
6. வீட்டின் மையப்பகுதியான பிரம்ம ஸ்தானத்தை எப்போதும் காலியாக வைத்திருங்கள்.
7. எதிர்மறை ஆற்றல் (Negative Vibes) வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, வீட்டின் நுழைவாயில் கதவில் வலது பக்கத்தில் 'சுபம்' என்றும், இடது பக்கத்தில் 'லாபம்' என்றும் எழுதுங்கள். மேலும், கதவுக்கு மேலே 'ॐ' வடிவத்தை வரையவும். இதனுடன் ஸ்வஸ்திக் குறியையும் வரைந்தால், நன்மைகள் அதிகரிக்கும். இப்படிச் செய்வதன் மூலம், வீட்டின் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும், வீட்டில் நல்லதே நடக்கும்.
8. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கடவுள்களின் படங்கள் அல்லது சிலைகளை வைப்பதற்கு பதிலாக, வடக்கு அல்லது கிழக்கு திசையில் பூஜை அறையை உருவாக்கி வழிபடுங்கள்.
9. வீட்டின் கூரை, பால்கனி அல்லது படிகளின் கீழ் ஒருபோதும் குப்பைகளை சேமிக்க வேண்டாம்.
10. தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசைகள் வீட்டில் வாகனங்களை வைக்க ஏற்ற திசைகளாகும். இந்த திசைகள்தான் மேல்நிலை தண்ணீர் தொட்டிகளுக்கும் ஏற்றவை.
இந்த எளிய வாஸ்து குறிப்புகளை (Vastu Tips) பயன்படுத்தி நாமும் பல நன்மைகளைப் பெறலாம்!!
ALSO READ: Vastu Tips: ஆனந்தம் கொண்டாடும் வீடு! எளிய tips, பெரிய வாழ்க்கை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR