மீனவ நலத்துறையில் வேலை வாய்ப்பு - 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மீனவ நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 433 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 01:32 PM IST
  • மீனவ நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • ஆகஸ்ட் 22ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
  • 433 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன
மீனவ நலத்துறையில் வேலை வாய்ப்பு - 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் title=

தமிழ்நாடு அரசு மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ தமிழக கடலோர கிராமங்களில்‌  சாகர்‌ மித்ரா என்கின்ற முற்றிலும்‌ ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு ஒரு வருடத்திற்கு பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சாகர்‌ மித்ரா பதவிக்கு 433 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பம் (IT) படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் படிக்க | B.COM, M.COM, BBA, MBA முடித்தவர்களுக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

ஊதிய விவரம்:

சாகர் மித்ராவுக்கு செயல்திறன் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestne... படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Bank Holidays August 2022: இந்த வாரம் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News