முடி உதிர்வு அல்லது வழுக்கையை தலை பிரச்சனையை பலரும் சந்தித்து வருகிறோம். இதனை சரி செய்ய அதிக விலையில் மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் கிரீம்களை வாங்கி பலரும் பயன்படுத்துகின்றனர். முடியை இயற்கையாகவே வளர செய்ய இரும்பு, துத்தநாகம், லைசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முடியும். முடி உதிர்தலை நிறுத்தி, மீண்டும் முடியை வளர செய்யும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | உடலில் பல அதிசயங்களை செய்யும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய தண்ணீர்
நெல்லிக்காய்
நெல்லிக்காய் எளிதில் கிடைக்கும் பழம் ஆகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் முடி உதிர்தலுடன் தொடர்புடையது. மேலும் தலைமுடியை உதிராமல் பார்த்துக்கொள்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மட்டி
இரும்புசத்து குறைபாடு உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். இதன் காரணமாகவும் முடி கொட்டும் பிரச்சனை உருவாகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை சத்தான உணவுகள் மூலமே சரி செய்யலாம். மட்டி, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களில் ஒன்றாகும். இதனை தினசரி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை சரி செய்யலாம். மேலும், கடல் உணவான சிப்பிகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சிப்பிகளில் துத்தநாகம் நிரம்பியிருப்பதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
பூசணி விதைகள்
சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் அதிக இரும்பு சத்து மற்றும் துத்தநாகத்தை பெற பூசணி விதைகளை சாப்பிடலாம். பூசணி விதைகளில் சுமார் 4.2 mg இரும்பு மற்றும் 2.9 mg துத்தநாகம் உள்ளது. இவை முடி வேர்களை ஊக்கப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
கோழி கல்லீரல்
எந்த வகையான இறைச்சியும் இரும்பு மற்றும் துத்தநாகம் நிரம்பியுள்ளது. கடல் உணவான மீன் மற்றும் மட்டனில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஆனால் கோழியிலும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருப்பதை மறக்க வேண்டாம். கோழி கல்லீரல் லைசின் மற்றும் ஜிங்க் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. மாட்டிறைச்சியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இவையும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.
சிவப்பு ஒயின்
ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்பட்டாலும், சிவப்பு ஒயினில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இவற்றில் மாதுளை சாற்றை விட அதிக அளவு ஊட்டசத்துக்குள் உள்ளது. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
பீன்ஸ்
வேகவைத்த பீன்ஸ் உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது, இவை முடி உதிர்வதை தடுக்கவும் மீண்டும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவும். இதே போன்று கீரையிலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துகள் உள்ளது. இந்த பட்டியலில் சோயாபீன்ஸ்களுக்கு அடங்கும். அசைவ உணவை உண்ணாதவர்களுக்கு இது போன்ற சைவ உணவுகள் அதிக இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களை தருகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்போ உடனே இத பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ