இன்றைய உலகில் பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இது அவர்களின் படிப்பு, உடல் நலத்தை மோசமாக்குகிறது. பல பெற்றோர்களுக்கு இது பெரிய கவலையாக உள்ளது. எனவே, குழந்தைகளிடம் மொபைல் கொடுக்கும் முன்பு சில செட்டிங்கை மாற்ற வேண்டும்.
உங்கள் மொபைலில் Screen Time Limit அம்சம் இருந்தால் அதனை பயன்படுத்திவரும். இந்த அம்சத்தின் மூலம், குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் உபயோகித்தால் தானாகவே லாக் ஆகி விடும்.
பல ஸ்மார்ட்போன்களில் பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) அம்சம் உள்ளது. இந்த அம்சம் பெற்றோரின் தேவைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்திய பிறகு உங்கள் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த முடியும்.
உங்கள் மொபைலில் பல ஆப்ஸ்கள் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தேவையில்லாத ஆப்ஸை லாக் செய்யுங்கள். இது குழந்தைகள் தேவையில்லாத ஆப்ஸ்களை பயன்படுத்துவதை தடுக்கும்.
உங்கள் குழந்தை YouTubeல் வீடியோக்களைப் பார்க்க விரும்பினால், கிட்ஸ் அம்சம் என்ற ஒன்று உள்ளது. இந்த அம்சத்தை ஆன் செய்த பிறகு, குழந்தைகளுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும்.
அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் போது குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க இருட்டான இடங்களில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்திருங்கள்.