’உலகம் உங்கள் கையில்’ என்பார்கள் ஒரு ஸ்மார்போன் உங்கள் கையில் இருந்தால். காரணம் தற்போது வெளியாகும் போன்களின் மூலம் செய்யமுடியாதது ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு மாறிவிட்டது.
தற்கால இளைஞர்களையும் போன்களையும் தற்போது பிரித்து வைத்தல் என்பதும் சாத்தியம் இல்லா ஒன்று, ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றாக வெளியானது தான் Light Phone.
அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பயன்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகினாலும், தற்போது தான் வரவேற்பினை பெற்று வருகிறது. லேப்டாப், போன் என கேஜட்ஸ் உலகில் மூழ்கியிருக்கும் இளைஞர்களை கேஜட்ஸ் அடிமைதனத்தில் இருந்து பிரித்து கொண்டு வரும் இந்த லைட் போன்களுக்கு தற்போது மவுசு கூடி வருகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலியர் மற்றம் டாங் என்பவர்களால் இந்த லைட் போன் வடிவமைக்கப்பட்டது. கேஜட்ஸ் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கும் மக்களுக்கு இது பயன்படும் என்ற நோக்கத்திலே இந்த போன் கண்டுப்பிடிக்கப்பட்டது.
எலிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட லைட் போன், அழைப்பு வசதி மற்றும் குறுஞ்செய்தி வசதியை மட்டும் கொண்டு உலக அளவில் பிரபலமானது. இந்நிலையில் தற்போது அதன் அடுத்த பதிப்பு Light Phone 2, சிறு முன்னேற்றத்துடன் வந்துள்ளது.
அதாவது, 4G இணைய வசதியின் மூலம் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதான் பயனர்கள் முன்பு இருந்த வசதிகளுடன் சேர்த்து, அருகாமையில் இருக்கும் UBER வாகனங்களை அழைத்தல், நினைவூட்டல் (Digital Remainder) போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் இந்த போன் மேம்படுத்தப் பட்டாலும், இந்த போனின் தனி சிறப்பு அம்சமான கேஜட்ஸ் எதிர்ப்பு தன்மையினை இயக்கவில்லை, இதனால் மக்களிடம் இந்த பதிப்பும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Courtesy: youtube/Jordi