நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் காரணமாக, ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை முழுமையாக குணப்படுத்தும் திறன் கொண்டது.
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ள பவர்ஹவுஸ் என அழைக்கப்படும் நெல்லிக்காயை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலம் வர இருப்பதால், பல பருவ கால பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், நெல்லிக்காயை தினமும் உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவீர்கள்.
உடல் பருமன் குறையும்
நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால், உங்கள் உடல் பருமனை வேகமாக குறைக்கலாம். நெல்லிக்காய் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இதனால், சிறிது சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த பானம் வளர் சிதை மாற்றம் என்னும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக கலோரிகளை எரித்து, எடை இழப்பை (Weight Loss Tips) துரிதப்படுத்த உதவும்.
சிறந்த டீடாக்ஸ் பானம்
நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, உடலில் இருந்து நச்சுக்களையும் கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் ஜூஸ் செய்து தேன் சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். இது உங்கள் கல்லீரலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும். இத்துடன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி ஆம்லா என்னும் நெல்லிக்காயில் நிறைந்துள்ளது. இவை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம் பல்வேறு விதமான நோய்கலீல் இருந்து நமது உடல் காப்பாற்றப்படுகிறது
செரிமான ஆரோக்கியம்
நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதனால், மலச்சிக்கல் போன்ற குடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு அருமருந்து
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சில கலவைகள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.
கூந்தல் ஆரோக்கியம்
நெல்லிக்காய் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும், அவற்றின் வேர்களை வலுப்படுத்தவும், உதவுகிறது. இதனால், அடர்த்தியான அழக்கான கூந்தலைப் பெறலாம். இள்நரை ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.
நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை
நெல்லிக்காய் சாறு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்கய் சாறு தயாரிக்க, புதிய நெல்லிக்காயை சிறிதளவு தண்ணீர் கலந்து அரைத்து, சுவைக்காக சிறிது தேன் அல்லது வெல்லம் சேர்த்து அருந்தலாம்.
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, சிறிது வறுத்து பொடித்த வெந்தயத் த்தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கி செய்யும் காரமான ஊறுகாய் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
நெல்லிக்காய் தூள்
நெல்லிக்காய் துண்டுகளை காயவைத்து நைசாக அரைக்கவும். இந்த பொடி செய்து வைத்துக் கொண்டு, தயிரில் அல்லது மோரில் சேர்க்கலாம்.
சாலட்
மதிய உணவு அல்லது இரவு உணவின் போது நீங்கள் புதிய நெல்லிக்காயை சாலட் வடிவில் உணவில் சேர்க்கலாம்.
சமையல்
சைவ அல்லது அசைவ சமையல் உணவுகளில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ