இன்றைய இயந்திர உலகில் மக்கள் பலரும் நேரம் எடுத்து சமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை, மொத்தமாக ஏதோ ஒரு உணவை சமைத்து அதனை தங்கள் வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைத்து தேவையானபொழுது அதனை எடுத்து உட்கொள்கின்றனர். இப்போது அனைவரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டிகள் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது, குளிர்சாதன பெட்டிகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது. பல சுகாதார நிபுணர்கள் சமைத்த உணவை அதிக நேரம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் சிலருக்கு எவ்வளவு நேரம் சமைத்த உணவினை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருக்கலாம் என்கிற கேள்வி இருந்து வருகிறது. பொதுவாகவே குளிர்சாதன பெட்டியில் சமைத்த உணவுகளை சேமித்து வைப்பது நல்லதல்ல என்றும் அவ்வாறு உணவுகளை சேமித்து வைத்தால் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஒல்லியாக இருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! இந்த 5 பிரச்சனைகள் பாதிக்கும்
குளிர்சாதன பெட்டியில் உணவை வைக்கும்போது எந்த வகையான ஊட்டச்சத்து இழக்கப்படுகிறது என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மிகவும் நிலையற்ற மற்றும் எளிதில் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால் தான் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகிறது என்பது இல்லை, இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் சமைக்கும்பொழுது கூட இழக்கப்படுகிறது. வெப்பம் தான் உணவுகளிலுள்ள வைட்டமின்களை அழிக்கிறது, குளிர் எப்போதும் உணவிலுள்ள வைட்டமின்களை அழிப்பதில்லை. உண்மையில், காற்று புகாத கொள்கலனில், பெரும்பாலான சமைத்த உணவுகள் குறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள் மற்றும் சில சமயங்களில் ஒரு வாரம் வரை கூட இருக்கும். தடையில்லாமல் எந்நேரமும் மின்சார விநியோகம் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும், ஆனால் இது உடலுக்கு ஏற்றதல்ல.
வேகவைக்கப்பட்ட அரிசி சில சமயங்களில் குறைந்த வெப்பநிலையில் வாழும் பாக்டீரியாவால் பாதிப்பிற்கு உள்ளாகலாம். அதனால் இதுபோன்ற வேகவைத்த அரிசி உணவை நீங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்து சாப்பிடுவது நல்லது. மேலும் இந்திய உணவுகள் காரமான, உப்பு மற்றும் புளிப்புடன் இருப்பதால் அவை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதற்கு சிறந்ததாக உள்ளது. இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமித்து சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். ரொட்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை நீண்ட காலத்திற்கு இருக்கும். சில சமயங்களில் அவற்றில் 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம், இதனால் உணவு நச்சாக மாறும். பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ