Corona Insurance: கொரோனாவால் திருமணம் ரத்து செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய்!

கொரோனாவில் திருமணம் ரத்து செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்! திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 12:47 PM IST
  • கொரோனாவால் திருமணம் தள்ளிப்போனால் 10 லட்ச ரூபாய்
  • திருமணம் ஒத்தி வைக்கப்பட்டாலும் இழப்பீடு
  • திட்டம் பற்றிய தகவல்கள்
Corona Insurance: கொரோனாவால் திருமணம் ரத்து செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய்! title=

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டான ஓமிக்ரானின் வழக்குகள் அதிகரித்து வருவதால் மீண்டும் இயல்புவாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் மீண்டும் ஊரடங்குச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை வரலாம் என நம்பப்படுகிறது.

கொரோனாவின் இரண்டு அலைகள் கடந்த பிறகு, மக்களின் வாழ்க்கை மெதுவாகத் இயல்புநிலைக்கு வந்தது. மக்கள் மீண்டும் முன்பு போலவே திருமணங்கள், விழாக்கள் மற்றும் பயணங்களுக்குத் திட்டமிட்டார்கள். ஆனால், தற்போது மீண்டும் கொரோனாவின் மூன்றாவது அலை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும், மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

10 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்
கொரோனா தொடர்பாக தலைநகர் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புதிய கட்டுப்பாடுகளின்படி, டெல்லியில் திருமணம் அல்லது எந்த வகையான நிகழ்ச்சிகளுக்கும்  20 பேருக்கு மேல் கூடக்கூடாது. இந்நிலையில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருமணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் டென்ஷன் அதிகரித்துள்ளது. பண நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என பலர் திருமணத்தை ரத்து செய்யத் தொடங்கிவிட்டனர். 

கொரோனா காலத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் திட்டம் உண்டு. அது பற்றி தெரியுமா? 

நாட்டின் பல காப்பீட்டு நிறுவனங்களும் திருமணக் காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பிற்கு இப்போது 10 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். ICICI Lombard, Future Generali, HDFC Argo, Bajaj Allianz General Insurance போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திருமணக் காப்பீட்டை வழங்குகின்றன.

 ALSO READ | 16 வயதில் திருமணம் செய்தால் தப்பில்லை’ உ.பி எம்.பி பேச்சு

திருமண காப்பீடு 
அதிகரித்து வரும் கொரோனா வழக்கைக் கருத்தில் கொண்டு, புதிய வழிகாட்டுதல்கள் காரணமாக, இந்த ஆண்டும் பல திருமணங்கள் ரத்து செய்யப்படலாம். விருந்து மண்டபம், திருமண மண்டபம், என லட்சக்கணக்கில் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு திருமணத்தை ஒத்திப்போடுவதும், எளிமையாக திருமணம் செய்வதும் பண இழப்பை ஏற்படுத்துகின்றன.

திருமணக் காப்ப்பீடு மூலம், திருமணத்தை ரத்து செய்வது முதல் நகைகள் திருட்டுப் போவது, திருமணத்திற்குப் பிறகு விபத்து ஏற்படுவது போன்ற பல இடர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.  

திருமணக் காப்பீடு செய்திருந்தால், உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. உண்மையில், இதில், காப்பீட்டு நிறுவனங்கள் திருமணத்திற்கான பேக்கேஜ்களை முன்கூட்டியே தயார் செய்கின்றன. அதே நேரத்தில், சில நிறுவனங்கள் தேவைக்கு ஏற்றாற்போல, பேக்கேஜ்களையும் வழங்குகின்றன.

காப்பீட்டின் வரம்புக்குள் வரும் விஷயங்கள் 
- உணவு வழங்குபவருக்கு முன்கூட்டியே செலுத்தப்பட்ட முன்பணம்
- முன்பதிவு செய்யப்பட்ட எந்த ஹால் அல்லது ரிசார்ட்டுக்கும் கொடுக்கப்பட்ட முன்தொகை
- பயண நிறுவனங்களுக்கு கொடுத்த முன்பணம் 
- திருமண அழைப்பிதழுக்கான செலவு  
- அலங்காரம் மற்றும் இசைக்காக செலுத்தப்பட்ட பணம் 
- மண்டப அலங்காரங்கள், திருமண இடம், செட்களுக்குக் கொடுத்த முன்பணம்

Also Read | கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கும் மத்திய அரசு!

காப்பீட்டுத் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
நீங்கள் எவ்வளவு காப்பீடு செய்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் திருமணக் காப்பீட்டுத் தொகை (Marriage Insurance) தீர்மானிக்கப்படுகிறது. திருமணத்தை ரத்து செய்வது, திருமண தேதியை மாற்றுவது என இரு சந்தர்ப்பங்களிலும் காப்பீடு கிடைக்கும். 
காப்பீடு செய்யப்படும் தொகையில் 0.7 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை மட்டுமே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ரூ.10 லட்சத்திற்கான திருமணக் காப்பீட்டுக்கு ரூ.7,500 முதல் 15,000 வரை பிரீமியம் செலுத்த வேண்டும்.

காப்பீடு மறுக்கப்படும் சூழ்நிலைகள் 
- பயங்கரவாத தாக்குதல்
- வேலைநிறுத்தம்
- திருமணம் திடீர் ரத்து செய்வது அல்லது முறிந்து போவது
- மணமகன் அல்லது மணமகன் கடத்தப்படுவது
- திருமணத்தில் கலந்துக் கொள்ள வரும் மணமகன் அல்லது மணமகன் தங்கள் சொந்த தவறு காரணமாக விமானம் அல்லது ரயிலை தவறவிட்டால்
- திருமண உடைகள் அல்லது தனிப்பட்ட உடமைகளுக்கு சேதம்
- திருமண இடம் மாற்றம் அல்லது திடீரென கல்யாணம் ரத்து (Marriage issues) செய்யப்படுவது
- மின் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக திருமணம் ரத்து செய்யப்படுவது
- திருமண இடத்தின் பராமரிப்பு குறைவால் ஏற்படும் சேதம்
- வேண்டுமென்றே தீங்கு விளைவிப்பது அல்லது தற்கொலை செய்து கொள்வது

READ ALSO | நாளிதழ்களை பி.டி.எப் ஆக பகிரும் வாட்ஸ்அப் குழுக்களை நீக்க உத்தரவு!

திருமண காப்பீட்டை எடுப்பது எப்படி?
திருமணத்திற்கான இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன், திருமணச் செலவுகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் காப்பீட்டு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்கவும்.
உங்கள் பொருட்கள் ஏதேனும் திருடப்பட்டிருந்தால், அதைப் பற்றி காவல்துறைக்குத் தெரிவித்து, எஃப்ஐஆர் நகலை காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
உரிமைகோருவதற்கு படிவத்தை நிரப்பவும், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.
உங்கள் காப்பீட்டு நிறுவனம், விசாரணைக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி தகவல்களை சேகரிக்கும். 
உங்களுடைய காப்பீட்டு கோரிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் இழப்பை முழுமையாக ஈடு செய்யும்.
தவறான உரிமைக்கோரல் எனில், கோரிக்கை நிராகரிக்கப்படும்.
- பாலிசிதாரருக்கு கொடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் திருப்தி அடையவில்லை என்றால், அவர் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடரலாம்.
- விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் திருமணக் காப்பீட்டுக் கோரிக்கை தீர்க்கப்படும்.

Also Read | உத்தரப்பிரதேசத்தில் தில்லுமுல்லு! அரசு நிதியுதவிக்காக சகோதரியை திருமணம் செய்த நபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News