யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால் செய்துள்ள சாதனைகளை பற்றி பார்ப்போம்.
முதல் 15 டெஸ்டில் 1500 ரன்கள் எடுத்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்று சாதனையை ஜெய்ஸ்வால் புரிந்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 1568 ரன்கள் அடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் 2வது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் சதமடித்த 3வது இந்தியர் என்று பெருமையை பெற்றுள்ளார் ஜெய்ஸ்வால்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4 சதங்களையும் 150ஆக மாற்றிய 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஜெய்ஸ்வால். முதல் வீரர் க்ரேம் ஸ்மித் ஆவார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இவரது சிறப்பான தொடக்கத்தின் மூலம் முதல் டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இவரை தொடர்ந்து விராட் கோலி சிபிராக விளையாடி வருவதால் இந்தியா 500 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.