Must Read Fictional Books About Self Love : நம் அனைவருக்குமே சுய காதல் என்பது மிகவும் முக்கியம். அதை சில கதை புத்தகங்கள் கற்றுக்கொடுக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Must Read Fictional Books About Self Love : புத்தகங்கள் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கடத்திச்செல்ல உதவும். அதிலும் கதைப்புத்தகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த புத்தகங்கள், நமக்கு புதிதான விஷயங்களை கற்றுக்கொடுக்கும், நம்மை நாமே காதலிக்கவும் கற்றுக்கொடுக்கும். அப்படிப்பட்ட சில புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
The Midnight Library: ஒரு நூலகத்தில், வாழ்க்கையை வாழ்வதற்கான பல வழிகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை காட்டுகிறது இந்த புத்தகம். இதனை மேட் ஹைக் எழுதியிருக்கிறார்.
Big Magic புத்தகத்தை எலிசபத் கில்பர்ட் என்பவர் எழுதியிருக்கிறார். இது, நம் படைப்பாற்றலை தூண்டச்செய்யும் புத்தகங்களுள் ஒன்று. தன்னம்பிக்கையை வளர்க்க, சுய காதலை அதிகரிக்க கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது.
Wild புத்தகத்தை, Cheryl Strayed என்பவர் எழுதியிருக்கிறார். இது, இவர் வாழ்வில் நடந்த விஷயங்களை வைத்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். மன உறுதி, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
You Are A Badass புத்தகத்தை ஜென் சின்செரோ என்பவர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், எல்லையற்ற அன்பை பிறர் மீது காட்டுவதற்கு முன்பு, நம் மீது நாம் காட்டிக்கொள்வது எப்படி என்பதை எடுத்துரைக்கிறது.
The Perks Of Being A Wallflower புத்தகத்த ஸ்டீஃபன் சோபோஸ்கி எழுதியிருக்கிறார். தன்னையும், தன்னை சார்ந்த உறவுகளையும் அறிந்து கொள்வது எப்படி என்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.
The House In The Cerulean Sea புத்தகம், எதிர்பாராத நபர்கள் நம் வாழ்வில் எப்படி எதிராராத மாற்றங்களையும், சுய காதலையும் கற்றுக்கொடுத்துவிட்டு செல்கின்றனர் என்பதை காட்டுகிறது.
Eleanor Oliphant Is Completely Fine புத்தகத்தை கெய்ல் ஹனிமேன் எழுதியிருக்கிறார். தனிமையில் வாழும் ஒருவர், எப்படி தன் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார் என்பதை கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது.