வீட்டுக் கடன் வாங்க இந்த COVID காலம் சரியான காலமா? ஆம் எங்கிறார்கள் நிபுணர்கள்!!

தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மற்ற நடவடிக்கைகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கணிசமாகக் குறைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2020, 05:47 PM IST
  • கோவிட் -19 தொற்றுநோய் பெரும் அளவில் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி பிப்ரவரி முதல் ரெப்போ விகிதத்தை 115 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
  • வட்டி விகிதங்கள் குறைந்துள்ள இந்த COVID காலம் வீடு வாங்குவதற்கான சரியான காலம் என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.
வீட்டுக் கடன் வாங்க இந்த COVID காலம் சரியான காலமா? ஆம் எங்கிறார்கள் நிபுணர்கள்!! title=

COVID-19 தொற்றுநோய் பெரும் அளவில் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், இந்தியாவும் தொற்றுநோயின் தாக்கத்தின் கீழ் தள்ளப்படுகிறது. குறைந்த வணிக செயல்பாடு காரணமாக வீட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் இந்த காலகட்டத்தின் போது வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது விவேகமானதா? ஒவ்வொரு கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலமும் இருக்கும் என்று கூறுவார்கள். அதே போல்தான் இன்றைய நிலையும்.

மார்ச் மாதத்தில் நாடு தழுவிய லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மற்ற நடவடிக்கைகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கணிசமாகக் குறைத்தது. ரெப்போ வீதத்தின் குறைப்பு வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக வந்துள்ளது.

பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு வீட்டை வாங்குவது என்பது வாழ்க்கையின் கனவாக உள்ளது. ஏராளமான வீடுகள் நிதியுதவி மூலம் வாங்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. முதன்மையாக அதன் நீண்ட காலத்தின் தன்மை காரணமாக, வீட்டுக் கடன்கள் (Home Loans) கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் போன்ற பிற வகையான கடன் வசதிகளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன.

வீட்டுக் கடன்கள் ஒரு நீண்டகால உறுதிப்பாடாகும். இது பொதுவாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். வீட்டுக் கடனில் இரண்டு கூறுகள் உள்ளன-அசல் தொகை மற்றும் வட்டி கூறு. வட்டி விகிதத்தில் ஒரு சிறிய குறைப்பு கூட நீண்ட காலத்திற்கு ஒட்டுமொத்த கடன் தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்தும். பிரபலமான கருத்துக்கு மாறாக, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் தனிப்பட்ட கடன் வழங்குநர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் வெளிப்புற வரையறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

முந்தைய கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை MCLR எனப்படும் விளிம்பு செலவு அடிப்படையிலான கடன் விகிதங்களுக்கு பயன்படுத்தினர். அக்டோபர் 2019 இல், மத்திய வங்கி வீட்டுக் கடன்களுக்கு புதிய வரையறைகளை பயன்படுத்துமாறு கடன் வழங்குநரைக் கேட்டு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. ரிசர்வ் வங்கி பல விருப்பங்களை வழங்கியிருந்தாலும், பெரும்பாலான கடன் வழங்குநர்கள் வீட்டுக் கடன்களுக்கான அளவுகோலாக ரெப்போ வீதத்தைத் (Repo Rate) தேர்ந்தெடுத்தனர். இந்த ரெப்போ வீதம் இணைக்கப்பட்ட கடன் விகிதம் RLLR எனப்படும்.

ALSO READ: BSNL பயனர்களுக்கு ₹.399 புதிய அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்!!

ரிசர்வ் வங்கி (Reserve Bank) பிப்ரவரி முதல் ரெப்போ விகிதத்தை 115 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. சென்ற ஆண்டு 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. ரெப்போ விகிதத்தில் மூன்று இலக்க குறைப்பு வீட்டுக் கடன் விகிதங்களில் சரிவுக்கு வழிவகுத்தது. குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் சோர்வடைந்த நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் விலைகளுடன் கோவிட் -19 தொற்றுநோய் காலம் உங்கள் கனவு வீட்டை வாங்குவதற்கான சிறந்த காலமாகியுள்ளது.

இப்போது ரியல் எஸ்டேட்டில் பொதுவாக விலைகள் குறைந்துள்ளதாலும் வீடு வாங்குவோரின் அளவு குறைந்துள்ளதாலும், உங்களிடம் போதுமான சேமிப்பு இருந்தால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில் உங்களுக்கு வீடு கிடைத்தால், அப்படிப்பட்ட உங்கள் கனவு வீட்டைப் வாங்குவதற்கான சரியான நேரமாக இது இருக்கலாம். வீட்டுக் கடன் விகிதங்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டிருக்கின்றன. கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்களுடன் தள்ளுபடி விலையில் ஒரு வீடும் கிடைத்தால், அந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும். வட்டி விகிதங்கள் குறைந்துள்ள இந்த COVID காலம் வீடு வாங்குவதற்கான சரியான காலம் என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.  

ALSO READ: ஆன்லைன் மருந்து விற்பனையை துவங்கியது அமேசான் நிறுவனம்!!

Trending News