தங்கம் விதிகள்: தங்கம் என்பது ஒரு விலைமதிப்பற்ற பொருள் என்பதோடு, தென்னிந்திய பெண்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு பொருள் எனலாம். அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ் பெண்களுக்கும் தங்கத்தும் மிகவும் நெருக்கம் உள்ளது. தங்கம் என்பது இந்தியர்களிடையே மங்களகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக தங்க நகைகள் வைத்திருப்பதை கௌரமாக நினைப்பவர்கள் ஏராளம். வீட்டில் பண்டிகை என்றாலும், திருமண விழா என்றாலும், தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை.
தங்க நகைகள் முதல் நாணயங்கள் வரை தங்கம் வாங்கும் மோகம் இந்தியர்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிகமாக உள்ளது. இருப்பினும் ஒரு அளவுக்கு மேல் தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்க அரசின் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது தங்க நகைகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கலாம் என்ற விதி உள்ளது. அதற்கான வரம்புகள் வருமான வரித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதன் வரம்பு தெரிய வேண்டும். பெண்கள் வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தங்கக் கட்டுப்பாடு சட்டம் 1968
முந்தைய தங்கக் கட்டுப்பாடு சட்டம் 1968 இந்தியாவில் பொருந்தும். இதன்படி, குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்தச் சட்டம் ஜூன் 1990ல் ரத்து செய்யப்பட்டது.அதன்பின் தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு குறித்து அரசு எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஒரு பெண் அல்லது நபர் தங்களிடம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்ட வரம்பு இல்லை.
CBDT என்ன சொல்கிறது?
1994 ஆம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது. திருமணமான பெண் 500 கிராம் எடையுள்ள தங்க நகைகளைன் வைத்திருக்கலாம், அதை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள். திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலான தங்க நகைகளைப் வைத்திருக்கலாம். அது பறிமுதல் செய்யப்படாது. திருமணமான அல்லது திருமணமாகாத ஆண் வைத்திருக்கும்100 கிராம் வரையிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படாது. இருப்பினும், வருமான ஆதாரம் இல்லாமல் அதிக தங்கம் பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | தங்க நகைகளை வாங்கும்/விற்கும் முன்பு இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
வரி விதிகள்
நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக் கணக்கிலும் இதை குறிப்பிட வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதைக் காட்டலாம்.
மூலதன ஆதாய வரி
அதே போல், யாரேனும் ஒருவர் தங்கத்தை மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி (LDCG) விற்பனை வருவாயில் விதிக்கப்படும். மேலும், நீங்கள் தங்கத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் தனிநபரின் வருமானத்துடன் சேர்க்கப்படும். அதோடு, அதன் மீது பொருந்தக்கூடிய வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.
தங்க முதலீட்டுப் பத்திரம்
தங்க முதலீட்டு பத்திரங்கள் (SGB) விற்பனை செய்யப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, உங்களுக்கு பொருந்தக் கூடிய வரி அடுக்குக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். மூன்று வருடங்கள் வைத்திருக்கும் தங்க முதலீட்டு பத்திரங்கள் விற்கப்படும் போது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். நீங்கள் முதிர்வு காலம் முடிந்த பிறகு தங்கப் பத்திரங்களை விற்றால் அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி இல்லை.
மேலும் படிக்க | Weekly Gold Price: இந்த வாரத்தில் தங்கம் வாங்கினால் இவ்வளவு விலை குறைவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ