புதிய 2022 Bajaj Pulsar N160 அறிமுகம்; புதுசா என்ன இருக்கு

2022 Bajaj Pulsar N160 Launch: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் என்160 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 23, 2022, 08:48 AM IST
  • புதிய பல்சர் என்160 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்.
  • இது 160சிசி நேக்கட் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் பைக் ஆகும்.
புதிய 2022 Bajaj Pulsar N160 அறிமுகம்; புதுசா என்ன இருக்கு title=

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் என்160 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 160சிசி நேக்கட் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் பைக் ஆகும். கூவாட்டர் லிட்டர் பல்சர் மோட்டார்சைக்கிள்கள் எந்த பிளாட்ஃபார்மில் கட்டப்பட்டதோ அதே பிளாட்ஃபார்மில் இதுவும் கட்டப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் என்160 சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மாறுபாட்டின் விலை ரூ.1.22 லட்சமாகவும், டூயல்-சேனல் ஏபிஎஸ் மாறுபாட்டின் விலை ரூ.1.27 லட்சமாகவும் உள்ளது. இந்த விலைகள் டெல்லி எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

இந்த பைக்கின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது முற்றிலும் பல்சர் என்250 ஐ போல் இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் ட்வின் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஷார்ப் டேங்க் எக்ஸ்டென்ஷன், இன்ஜினைப் பாதுகாக்க அண்டர்பெல்லி கவுல், ஸ்டப்பி எக்ஸாஸ்ட், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் ஆகியவை உள்ளன. செக்மெண்ட்டின்  முதல் டூயல்-சேனல் ஏபிஎஸ் மாறுபாடு புரூக்ளின் பிளாக் நிறத்தில் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்

இருப்பினும், குறைந்த விலை கொண்ட சிங்கள்-சேனல் ஏபிஎஸ் மாடல் கரீபியன் ப்ளூ, ரேசிங் ரெட் மற்றும் புரூக்ளின் பிளாக் என மொத்தம் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். பல்சர் என்160 ஆனது 164.82சிசி, சிங்கிள் சிலிண்டர், நான்கு-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 15.7 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

இதன் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்ஸ் தலைவர் சாரங் கனடே கூறியதாவது:"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பல்சர் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்-மோட்டார் சைக்கிள் புரட்சிக்கு முன்னோடியாக இருந்தது. மிகப் பெரிய பல்சர், பல்சர் 250 அக்டோபர் 2021 இல் புதிய இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது வாடிக்கையாளர்கள், மக்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றது. புதிய தளத்தை 160சிசி பிரிவுக்கு விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் சாரங் கனடே கூறுகையில், 'புதிய பல்சர் என்160 அற்புதமானதாக இருக்கும், சிறந்த ஸ்ட்ரீட் ரைட்டிங் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதற்கிடையில் இந்த புதிய  பல்சர் என்160 ஆனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர், யமஹா எஃப்இசட்-எஸ் ஃபை வி3.0, சுசுகி ஜிக்ஸர், ஹோண்டா எக்ஸ்-பிளேடு மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி போன்ற பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா: இந்தியாவின் முதல் சிஎன்ஜி எஸ்யூவி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News