நாம் 21 ஆம் நூற்றாண்டில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம் மற்றும் அனைத்தும் டிஜிட்டல் நோக்கி நகர்கிறது. உதாரணமாக, இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் (Online Money Transfer) செய்கிறார்கள். அதாவது முன்பு மக்கள் வங்கியில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. அதன்பிறகு அவர்கள் யாருக்கும் பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப முடியும். அதேநேரம், இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறி மக்கள் ஆன்லைன் நோக்கி நகர்ந்துள்ளனர்.
வங்கிக் கணக்காக இருந்தாலும் சரி, UPI ஆக இருந்தாலும் சரி, இந்த இரண்டு வழிகளிலும் மக்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இருப்பினும், ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி சிறப்பாக இருந்தாலும், அதே நேரத்தில், ஆன்லைனில் பணம் அனுப்பும் போது சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகள் நடக்கின்றன.
இதுபோன்ற நேரங்களில், நீங்கள் நிதி ரீதியாக பாதிக்கப்படலாம். அதே சமயம், தவறான வங்கிக் கணக்கில் பணம் போய்விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே இந்த தவறுகள் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். எனவே ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நீங்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். வாருங்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
மொபைல் எண் மற்றும் UPI ஐடியில் தவறு செய்யாதீர்கள்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை UPI மூலம் செய்கிறார்கள். மொபைல் எண் மற்றும் UPI ஐடியை உள்ளிட்டு மக்கள் ஒருவருக்கொருவர் பணத்தை அனுப்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், தவறாக நிரப்ப வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
ALSO READ | பிப்ரவரியில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை; முழு விவரம் இதோ
வங்கி கணக்கு விவரங்களை சரியாக நிரப்பவும்
வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் சிறிய தவறு தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பப்படலாம். பணத்தை வேறொரு வங்கிக்கு செலுத்த ஆன்லைன் மூலம் செய்யப்படும் NEFT, IMPS மற்றும் RTGS போன்ற பரிவர்த்தனைகளை பயன்படுத்தலாம்.
வேறொருவரின் கணக்குக்கு பணம்- எச்சரிக்கை
கணக்கு எண்ணை நிரப்புவதில் தான் பலர் மிகவும் தவறு செய்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவர்களின் பணம் வேறொருவரின் கணக்குக்கு சென்றடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தவறை சரிசெய்ய நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும். மேலும் பல சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் மற்றும் நேரமும் வீணாகும்.
IFSC குறியீடு குறித்து எச்சரிக்கை
நாம் ஒருவருக்கு பணத்தை மாற்றும்போது, கணக்கு எண்ணுடன் IFSC குறியீட்டை உள்ளிடுவோம். ஆனால் நீங்கள் தவறான IFSC குறியீட்டை உள்ளிட்டால், அந்த கிளையின் IFSC குறியீட்டுடன் கணக்கு எண்ணும் பொருந்தினால், உங்கள் பணம் தவறான கணக்கிற்குச் செல்லலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
ALSO READ | பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR