ஆர்பிஐ தொடர்ந்து வங்கி மற்றும் நிதியியல் சேவை துறையில் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பிரிவில் தற்போது முக்கியமான மற்றும் அவசியமான சீர்திருத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குவது குறித்த மாஸ்டர் சர்குலரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து பல முக்கிய விவரங்கள் உள்ளன. இதில் முக்கியமான விஷயங்கள் என்னென்ன, என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | தினமும் ரூ7 சேமித்தால் ரூ60000 ஓய்வூதியம் பெறலாம்! முதலீடு செய்வது எப்படி
மாஸ்டர் சர்குலர் என்றால் என்ன
வட்டி விகிதம், கட்டணங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை வங்கிகள் ஒரே பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று மாஸ்டர் சர்குலரில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்டு விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை வங்கி வாடிக்கையாளரிடம் தெரிவிக்கும். அதே நேரத்தில், கார்டின் விதிமுறைகள் மாறும்போது வாடிக்கையாளர்கள் தகவல்களை அனுப்ப வேண்டும்.
கார்டு மோசடிக்கு எதிரான காப்பீட்டுத் தொகை
கார்டு மோசடியில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் காப்பீட்டுத் தொகையை வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மேலும் கூறுகிறது. வாடிக்கையாளரின் அனுமதியின்றி வங்கிகள் வங்கி கார்டுகளை வழங்காது அல்லது மேம்படுத்தாது. கேட்காமல் கார்டு கொடுத்தால், வசூலிக்கப்பட்ட கட்டணத்தின் இருமடங்கைத் திருப்பித் தர வேண்டும். மறுபுறம், கேட்காமல் வழங்கப்பட்ட கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் இழப்பை வங்கிகள் ஏற்கும்.
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குபவர்கள் அதை ஆக்டிவேட் செய்வதற்கு அட்டைதாரரிடம் இருந்து ஓடிபி ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தாமல் இருந்தால். 30ஆம் நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு எந்தச் செலவும் இன்றிக் கிரெடிட் கார்ட் கணக்கை மூடப்படும்.
கணக்கு புதுப்பிக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அட்டையாக இருந்தால் அட்டைதாரரின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்திய பின்பு கணக்கு மூடப்படும். இந்த புதிய விதிமுறை மூலம் கிரெடிட் கார்டை வாங்கிய பின்பு பயன்படுத்தாமல் இருக்கும் இருப்போர் எண்ணிக்கை குறையும், மேலும் கிரெடிட் கார்டை முடக்க இனி எந்த விதமான கட்டணமும், சுமையும் இல்லாமல் எளிதாக மூட முடியும்.
மேலும் படிக்க | ஏப்ரல் 20-ல் 420 உருவானதன் சுவாரஸ்ய பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR