அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது அருமையான வேலைவாய்ப்பு செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜிடிஎஸ் வேலை வாய்ப்பு விவரம்
- வேலை வாய்ப்பு: தமிழக அஞ்சல் துறை
- பணியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS)
- காலிப் பணியிடங்கள்: 2994
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023
- விண்ணப்பிக்கும் முறை: Online
மேலும் படிக்க | இந்த 1 ரூபாய் 'Coin' உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
காலிப்பணியிடங்கள் விவரம்: 2994
UR – 1406, OBC – 689, SC – 492, ST – 20, EWS – 280, PWDA – 22, PWDB – 38, PWDC – 31, PWDDE – 16,
GDS கல்வி தகுதி:
கணிணி மற்றும் ஆங்கிலத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
மற்ற தகுதிகள்
- கணினி அறிவு
- சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
வயது:
23.08.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
GDS சம்பள விவரம்:
BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
ABPM/DakSevak – ரூ.10,000/- முதல் ரூ..24470/-
மேலும் படிக்க | 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! டிஏ, ஊதிய உயர்வு அப்டேட்
Gramin Dak Sevaks (GDS) தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
GDS விண்ணப்ப கட்டணம்:
- GEN/OBC/EWS – ரூ.100/-
- SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ