PM Kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

PM-Kisan திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று 4 மாத தவணைகளில் தலா 2000 ரூபாயாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 05:04 PM IST
  • PM Kisan திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும், வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீங்கள் பிரதமர் கிசான் திட்டத்தின் நன்மைகளைப் பெறும் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும்.
  • இந்த வசதி ஆன்லைனிலும் கிடைத்தாலும், இதற்கு உங்களிடம் இணைய வங்கி சேவைக்கான அணுகல் இருக்க வேண்டும்.
PM Kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் title=

புதுடில்லி: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும், சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, சாகுபடி செய்யக்கூடிய நிலங்களுடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், விவசாயிகள் தங்களது ஆதார் அட்டைகளை (Aadhaar Card), நிதி அனுப்பப்படும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளுடன் (Bank Account) இணைக்கவில்லை என்றால், அவர்களுக்கு இனி PM-KISAN திட்டத்தின் பலன்கள் கிடைக்காது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அமைச்சரவை அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், 2021 மார்ச் 31 வரை பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழுள்ள நலன்களைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கட்டாயத் தேவையை தளர்த்தியது. இருப்பினும், பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, தரவுத் தளத்தில் ஆதார் விவரங்களை இணைப்பதற்கான காலக்கெடு 2019 டிசம்பராகத்தான் இருந்தது.

ALSO READ: PM Kisan ஐ சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இன்னும் ஒரு வாய்ப்பு...

உங்கள் ஆதாரை வங்கிக் கணக்குடன் எவ்வாறு இணைப்பது?

நீங்கள் பிரதமர் கிசான் திட்டத்தின் நன்மைகளைப் பெறும் வங்கிக் கணக்கு ஆதார் (Aadhaar) உடன் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் வங்கிக்குச் சென்று அதை உங்கள் கணக்குடன் இணைக்குமாறு கேட்க வேண்டும். இதற்கு, உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலிலும் கையொப்பமிட வேண்டும். இந்த வசதி ஆன்லைனிலும் கிடைத்தாலும், இதற்கு உங்களிடம் இணைய வங்கி சேவைக்கான (Online Banking) அணுகல் இருக்க வேண்டும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம் பிரதமர் மோடியால் (PM Modi) 2019 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும் சாகுபடி நிலங்களுடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று 4 மாத தவணைகளில் தலா 2000 ரூபாயாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்படுகிறது. 

ALSO READ: PM Kisan Yojana: விரைவில் 7வது தவணை!! கண்டிப்பா இதை செய்யுங்கள், ரூ. 2000 கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News