புதுடெல்லி: நீங்கள் கணினியில் (PC) ஏதேனும் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் கணினியின் Mouse அல்லது Laptop-ன் trackpad சரியாக வேலை செய்யவில்லை என்றால், கண்டிப்பாக எரிச்சல் ஏற்படும். ஆனால், இனி அதற்காக கவலைப்பட தேவையில்லை. உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், இந்த சிக்கலை எளிதில் தீர்க்க முடியும்.
ஸ்மார்ட்போன்களை பிசி அல்லது லேப்டாப்பிற்கான வயர்லெஸ் ரிமோட் மவுஸாகப் (Wireless Remote Mouse) பயன்படுத்தலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் மோனெக்ட் பிசி ரிமோட் செயலியை (Monect PC remote App) பதிவிறக்கம் செய்தால் போதுமானது.
இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்தால், புளூடூத் அல்லது வைஃபை மற்றும் யூ.எஸ்.பி உதவியுடன் கணினியை தொலைவிலிருந்து இயக்கலாம். பிசி கேமிங்கிற்குப் பயன்படுத்தப்பட்டால், தொலைபேசியின் சென்சார்களான கைரோ, ஆக்ஸிலெரோமீட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான வசதியையும் இது வழங்குகிறது. இந்த செயலியுடன் கணினியை இணைத்த பிறகு, நீங்கள் கணினியை எளிதில் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாதனங்களுக்கு இடையில் கோப்பு பரிமாற்ற (File transfer) வசதியையும் இது வழங்குகிறது.
ALSO READ: இந்தியாவில் Galaxy Tab S7, Tab S7 சீரிஸ் வெளியீடு... விலை & அம்சங்கள் என்ன?
இதை எப்படி உபயோகிப்பது
-இதை பயன்படுத்த, நீங்கள் முதலில் உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் Monect desktop server Client-ஐ நிறுவ வேண்டும்.
-இதற்குப் பிறகு, மோனட் பிசி ரிமோட்டை, கூகிள் ப்ளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து உங்கள் தொலைபேசியில் நிறுவவும்.
-செயலியை திறந்தவுடன், Connect to PC-ஐ செலக்ட் செய்யவும். இதை வைஃபை வழியாக அல்லது தொலைபேசி ஹாட் ஸ்பாட்களின் உதவியுடன் இணைக்க வேண்டும்.
இணைய இணைப்பு இல்லை என்றால், யூ.எஸ்.பி உதவியுடன், அதை பிசியுடன் இணைக்க முடியும். இதற்காக, நீங்கள் யூ.எஸ்.பி டெதரிங் ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டும்.
-இந்த செயலி பிசியுடன் இணைக்கப்பட்டவுடன், இதன் உதவியுடன், நீங்கள் கணினியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்.
இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன
-இதன் உதவியுடன், நீங்கள் எந்த வகையான பிசி விளையாட்டையும் விளையாடலாம். இதற்காக பட்டன்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால், லே அவுட்டையும் மாற்றலாம்.
-இதில், ரிமோட் மௌசுடன் கீபோர்ட் வசதியும் உங்களுக்குக் கிடைக்கும்.
-மீடியா, பிபிடி மற்றும் கேம்ஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.
-இது வயர்லெஸ் ஃபைல் ட்ரான்ஸ்ஃபருடன் திரை பகிர்வு வசதியையும் கொண்டுள்ளது.
-இது பாதுகாப்புக்காக 256 பிட் AES Session Encoding மற்றும் ரிமோட் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது.
-இது ஒரு இலவச செயலியாகும். நீங்கள் அதை Android (https://play.google.com/store/apps/details?id=com.monect.portable&hl=en_IN), iOS, டெஸ்க்டாப்பிற்காக பதிவிறக்கம் செய்யலாம்.
ALSO READ: வீட்டிலிருந்தவாறே SIM-யை வேறு நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்வது எப்படி?