Do Not Discuss These In Work Place : அலுவலகம் என்பது அனைவரும் பேசக்கூடும் இடமோ அல்லது நண்பர்கள் சந்திக்கும் இடமோ கிடையாது. அங்கு கூடும் அனைவருமே ஒரே நோக்கத்தோடு தான் வருவர். வேலை பார்க்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பல மணி நேரங்களை நாம் ஒரு சில மனிதர்களுடன் நேரத்தை செலவிடும்போது அவர்களிடம் பல விஷயங்களை கூற நேரும். அப்படி பல விஷயங்கள் இருந்தாலும் நாம் 5 விஷயங்களை மட்டும் கூறவே கூடாது. அவை என்ன தெரியுமா?
தனிப்பட்ட நிதி விவரங்கள்..
உங்களது நிதி தொடர்பான விஷயங்களை உடன் வேலை பார்ப்பவர்களுடன் கலந்துரையாட வேண்டாம். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை, உங்கள் சம்பளம், நீங்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்து யாரிடமும் கூற வேண்டாம். உங்களுடன் எதிர்பார்ப்பவர்கள் அனைவரும் உங்களைப் போலவே நல்ல முறையில் நினைக்க மாட்டார்கள். அவர்கள் எங்களது வாழ்க்கை முறையை வைத்து உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே வேலை பார்க்கும் இடத்தில் பணம் குறித்த விஷயங்களை விவாதிக்க வேண்டாம்.
உடல்நல பிரச்சனைகள்:
உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் குறித்து உங்களுடன் பணி புரிபவர்களிடம் கூற வேண்டாம். பல சமயங்களில் நமக்கு உடல் முடியாமல் இருக்கும்போது யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் நாம் அப்படி கூறிய விஷயங்கள் சில நாட்கள் கழித்து நமக்கே எதிரொலிக்கும். உங்களுக்கு உடல்நலம் சரியில்லாத போது யாரிடமிருந்து விடுமுறை கேட்க வேண்டுமோ அவரிடம் மட்டும் அது குறித்து தெரிவித்தால் போதும்.
அரசியல் மற்றும் மதம் சார்ந்த கருத்துக்கள்:
அரசியல் குறித்த உங்களது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் மத ரீதியான கருத்துக்களை வேலை பார்க்கும் இடத்தில் கலந்துரையாடக்கூடாது. உங்களுக்கு உங்களது கருத்துக்கள் நியாயமாக படலாம். ஆனால் இதே பார்வை அனைவருக்கும் இருக்கும் என கூறிவிட முடியாது. நீங்கள் ஒரு கருத்தை கூற போக, பிறர் உங்களுக்கு எதிரான கருத்துக்களை வைக்கும் போது அந்த எதிர் கருத்துக்கள் எதிர் விவாதங்களாக மாறி பின்னர் சண்டையாக உருவெடுக்கலாம். இதை தவிர்க்க, வேறு யார் அரசியல் அல்லது மதம் குறித்து பேசினாலும் அந்த உரையாடலில் இல்லாமல் இருப்பதும் நீங்கள் அது போன்ற உரையாடலை ஆரம்பிக்காமல் இருப்பதும் நல்லது.
மேனேஜர் குறித்து பேசுவது:
உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது நிறுவனம் குறித்து குறை கூறுவது/ கிசுகிசு பேசுவது பிறரால் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். ஒரு சிலர் ஆபீஸிற்குள்ளேயே கருப்பு ஆடாக இருந்து கொண்டு நீங்கள் பேசுவதை நேரிடத்தில் போட்டுக் கொடுப்பர். எனவே இது போன்ற விஷயங்களை தவிர்க்கவும்.
எதிர்கால வேலை திட்டங்கள்:
உங்களது வேலை குறித்த எதிர்கால திட்டங்களை பிறரிடம் கூறாமல் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிய வந்தால் அது உங்களுக்கு பாதகமாக முடியலாம். எனவே, உங்கள் கையில் அந்த வேலை வரும் வரை பிறரிடம் அது குறித்து கூறாமல் இருப்பது மிகவும் நல்லது.