New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்..!!

New Wage Code: மத்திய அரசு, வரும் அக்டோபர் மாதம் புதிய ஊதியக் குறியீட்டை  அமல்படுத்த உள்ளது. அதில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2021, 03:31 PM IST
  • புதிய ஊதியக் குறியீட்டில் வேலை நேரம் 9 முதல் 12 மணி நேரம் வரை அதிகரிக்கும்.
  • ஊழியர்கள் வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
  • ஒருநாளின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டு, நாட்கள் குறைக்கப்படும்.
New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்..!! title=

New Wage Code: மத்திய அரசு, வரும் அக்டோபர் மாதம் புதிய ஊதியக் குறியீட்டை  அமல்படுத்த உள்ளது. அதில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன.

புதிய ஊதியக் குறியீடு தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

-  இதில், வேலை நாட்கள் தொடர்பாக  புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்படும். இதன் மூலம் உங்கள் வார இறுதி விடுமுறை 3 நாட்களாக அதிகரிக்கும். 

- அதாவது, நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். 

- ஆனால், புதிய ஊதியக் குறியீட்டில் வேலை நேரம் 9 முதல் 12 மணி நேரம் வரை அதிகரிக்கும். 

- அதாவது  ஊழியர்கள் வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.  ஒருநாளின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டு, நாட்கள் குறைக்கப்படும். 

ALSO READ | New Wage Code அமலாக்கத்திற்குப் பிறகு உங்கள் ஊதியத்தில் வரப்போகும் மாற்றம் என்ன?

 

- எனினும், எந்த ஊழியரும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது என்ற விதியும் இதில் உள்ளது.  5 மணி நேரத்திற்கு பிறகு ஊழியருக்கு ஒரு அரை மணி நேரமாவது பிரேக் கொடுக்க வேண்டும். 
- இதன் மூலம் நான்கு நாட்கள் அதிக நேரம் வேலை செய்தால்,  3 வார இறுதி நாட்களை அனுபவிக்கலாம். 

மேலும், புதிய ஊதியக் குறியீட்டில், உங்கள் ஊதியத்திலும் மாற்றம் ஏற்படும். இதன் கீழ்  கொடுப்பனவுகள் மொத்த சம்பளத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்கள் அடிப்படை சம்பளம் அதிகரித்தும், அதன் மூலம் வருங்கால வைப்பு நிதி (Provident Fund) மற்றும் கிராச்சுட்டி ஆகியவை அதிகரிக்கும். 

இந்த புதிய ஊதியக் குறியீடு, முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சில மாநிலங்கள் இதை செயல்படுத்த இன்னும் தயாராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அதை அக்டோபரில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தீவிர நாவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | ₹6200 கோடிக்கு ₹14,000 பறிமுதல் செய்வதா; விஜய் மால்லையா காட்டம்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News