கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் கழித்த பின்னர், நடிகர் அபிஷேக் பச்சனின் (Abhishek Bachchan) கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.
தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு தவறாமல் தகவல் அளித்து வரும் நடிகர், ட்விட்டரில் தான் குணமடைந்ததாக அறிவித்தார்.
அபிஷேக் பச்சன், “இன்று பிற்பகல் என் COVID -19 பரிசோதனையின் முடிவுகள் நெகடிவாக வந்தன!!! நான் இதை வெற்றி கொள்வேன் என கூறி இருந்தேன். எனக்காகவும் எனது குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் எனது நன்றி. நன்றி!!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதினார்.
A promise is a promise!
This afternoon I tested Covid-19 NEGATIVE!!! I told you guys I’d beat this. thank you all for your prayers for me and my family. My eternal gratitude to the doctors and nursing staff at Nanavati hospital for all that they have done. THANK YOU!— Abhishek Bachchan (@juniorbachchan) August 8, 2020
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டு 2020 ஜூலை 11 அன்று மும்பையின் நானாவதி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
அபிஷேக்கின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருக்கும் லேசான கோவிட் -19 அறிகுறிகள் இருந்ததால், அவர்களும் சில நாட்களுக்கு நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.
ALSO READ: வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன்
கோவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமாகி அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) 2020 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அபிஷேக் தனது ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, நானாவதி மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ALSO READ: Big B, Abhishekக்கு கொரோனா; துப்புரவு செயல்முறையில் பச்சனின் ஜல்சா இல்லம்...