திருமணம் குறித்த வதந்திகளுக்கு முடுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தான் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முடுப்புள்ளி வைக்க தனது காதலன் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

Last Updated : May 11, 2019, 01:25 PM IST
திருமணம் குறித்த வதந்திகளுக்கு முடுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! title=

தான் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முடுப்புள்ளி வைக்க தனது காதலன் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

காக்கா முட்டை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், SK 16 என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் காதலில் விழுந்துவிட்டார் என்றும் விரைவில் இவருக்கு திருமனம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் காதலிப்பதாக செய்திகள் பரவி வருவதை கேள்விப்பட்டேன். தயவு செய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன். சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Trending News