ஆண்டிரியாவுடன் பிரேக் ஆப் ஆனது ஏன்? அனிரூத் வீடியோ வைரல்

ஆண்டிரியாவுடன் பிரேக் அப் ஆனது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் அனிரூத் வெளிப்படையாக பேசியிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2022, 01:52 PM IST
  • ஆண்டிரியாவுடன் காதல் குறித்து அனிரூத் ஓபன்டாக்
  • வயது வித்தியாசம் காரணமாக காதல் முறிந்தது
  • இணையத்தில் வைரலாகும் அனிரூத் வீடியோ
ஆண்டிரியாவுடன் பிரேக் ஆப் ஆனது ஏன்? அனிரூத் வீடியோ வைரல் title=

தமிழ் இசைத்துறையில் பையர் மோடில் இருப்பவர் அனிரூத். சிவகார்த்திகேயன் முதல் சூப்பர் ஸ்டார் வரை என முன்னணி சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். அனிரூத் இசையமைத்தாலே அந்தப் படத்தின் ஆல்பம் ஹிட் என்கிற அளவுக்கு உயர்ந்துவிட்டார். அவர் எப்படி இசையமைத்தாலும் ரசிப்பதற்கு பெருங்கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு தரமான பாடல்களையும் இசை விருந்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’... மன்சூர் அலிகானின் ரகளை நடனம் - வீடியோ

அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு அனிரூத் தான் இசையமைத்திருந்தார். அதில் ‘பத்தல பத்தல’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்து பிளாக்பஸ்டர் ஹிட் சாங்காக அமைந்தது. மேலும், படத்தில் அவருடைய பின்னணி இசை, பிஜிஎம் எல்லாம் வேற ரகமாக இருந்தது. விக்ரம் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு எல்லாம் தன்னுடைய பின்னணி இசையால் உயிரூட்டியிருந்தார் அனிரூத். இசைத்துறையில் எப்படி லைம் லைட்டில் இருக்கிறாரோ, அதேபோல் அவர் தொடர்பான சர்ச்சைகளும் அவ்வப்போது லைம் லைட்டுக்கு வந்து செல்லும். 

குறிப்பாக முன்னணி கதாநாயகிகள் உள்ளிட்டோருடன் அனிரூத் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் உலாவும். அவர் இசைத்துறைக்கு வந்தது முதலே இப்படியான செய்திகள் வருவது வழக்கம் என்றாலும், நடிகை ஆண்டிரியாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தின. அனிரூத்தை விட 6 வயது வித்தியாசம் கொண்ட ஆண்டிரியா, அவருடன் ரிலேஷன்ஷப்பில் இருந்துள்ளார். அதாவது, அப்போது அனிரூத்துக்கு 19 வயது. ஆன்டிரியாவுக்கு 25 வயது. 

இருப்பினும் இவர்களுடைய காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இது குறித்து அனிரூத் ஒரு பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார். அதில், ஆண்டிரியாவுக்கு வயது அதிகம் இருந்ததால், அந்த ரிலேஷன்ஷிப் ஒத்துவரவில்லை எனக் கூறினார். இனிமேல் தன்னைவிட வயது குறைவான பெண்ணை காதலிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | விக்ரம் படம் லோகேஷுடையதுதான் ஆனா ஐடியா இந்த இயக்குநரோடது...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News