Good Night Review: குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'குட் நைட்' படத்தின் திரை விமர்சனம்!

ஒரு மனிதனின் வாழ்வில் குறட்டை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கதைதான், குட்நைட். இந்த படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாமா?  

Written by - Melwin S | Last Updated : May 12, 2023, 10:46 AM IST
  • குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
  • மணிகண்டன் நடுத்தர குடும்ப இளைஞராக நடித்துள்ளார்.
  • ஒரு மனிதனின் வாழ்வில் குறட்டை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அழகாக இப்படத்தில் காண்பித்துள்ளனர்.
Good Night Review: குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'குட் நைட்' படத்தின் திரை விமர்சனம்!  title=

குட்நைட் படத்தில் ஜெய்பீம் , விக்ரம் வேதா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மணிகண்டன் மற்றும் இவருக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் பிரபல மடைந்த மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக் ,பாலஜி சக்திவேல்,ரேச்சல்ரெபேக்கா, பக்ஸ்,ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் . விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

படத்தின் ஒன்லைன்:

ஒரு மனிதன் தூக்கத்தில் விடும் குரட்டை சத்தம் அவன் வாழ்வில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் ஒன்லைன்

படத்தின் கதை:

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனான மோகன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். அவர் தூங்கும் நேரத்தில் விடும் குரட்டை சத்தம் அவரை சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. இதனால் நண்பர்கள், அலுவலகம், அவர் நினைத்துகொண்டிருக்கும் காதலி என அனைவரிடத்திலும் அவவமானப்படுகிறார் மோகன். இதனால், வாழ்க்கையில் விரக்த்தியில் இருக்கிறார் அவர். அவர் காதலி குறட்டையை காரணமாக வைத்து பிரிந்து செல்ல, மோகன் மனமுடைந்து போகிறார்.

மேலும் படிக்க | 'மங்காத்தா-2' படம் எப்போது? வெங்கட் பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

கதநாயகி மோகனுக்கு அறிமுகம் ஆக நாளடைவில் அது காதல் ஆக மாறி அது திருமணம் நடைபெறுகிறது. குறட்டையை மறைத்து திருமணம் செய்யும் மோகன், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி எப்படி வாழ்கிறார்கள் என்பதே படத்தின் கதை

Good Night

படத்தில் கதநாயகனே படத்தின் பிளஸ்

அம்மா,அக்கா, மாமா தங்கை என்று நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞனாக மிகவும் அழாகாக நடித்து இருக்கிறார் மணிகண்டன்.  இவர் நடிப்பு படத்தின் உள்ளே நம்மை இழுத்து செல்கிறது . கதாநாயகனுக்கு மாமாவாக ரமேஷ் பாலா நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகளும் நகைசுவையாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். 

கதநாயகி மீதா, தனது பங்கிற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கதையின் கதாபாத்திரத்திற்க்கு ஏற்ப நடித்து அசத்திருக்கிறார். ரமேஷ் பாலாவின் மனைவியாக ரேச்சல் நடித்திருக்கிறார் அவர் மணிகண்டனின் அக்கா குடும்பத்தை வழிநடத்தும் சிறப்பான கதாபாத்திரம். 

கதநாயகி தாத்தா பாட்டியாக பாலஜி சக்திவேலும், கெளசல்யா நடராஜனும் நடித்து இருக்கின்றனர்.  அதுவும் படத்தின் கூடுதல் பலமாக இருகிறது. 
படத்தின் ஒளிப்பதிவு ஜெயந்த் சேது மாதவன் அவரும் படத்தை நமக்கு அழாகாக காட்சி படுத்திருக்கிறார். 

படத்தின் மைனஸ்

படத்தில பாடல் காட்சிகள் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனம் . படத்தின் காதல் காட்சிகளும் சற்று நெருடலை உருவாக்கும் அதுவே படத்தின் மைனஸ்

மொத்தத்தில் படம் பல எமோஷன் காட்சிகளையும் ஹீயுமர் கலந்த நகைச்சுவை காட்சிகளையும் வைத்து நிறப்பப்பட்டுள்ளது.  படம் பார்க்க செல்பவர்களுக்கு இது நம்ப குடும்பத்தில் நிகழும் நிகழ்வு போன்று உள்ளதே என்ற மன நிலைக்கு வரும் அளவுக்கு படத்தை இயக்கிருக்கிறார் இயக்குநர் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

மேலும் படிக்க | Custody Twitter Review:"கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..” கஸ்டடி படத்தின் ட்விட்டர் ரிவியூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News