Jailer Audio Launch Free Pass: ரஜினி நடிப்பில் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாக 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய, நெல்சனின் உருவாக்கத்தில் இப்படம் தயாராகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளன.
ரஜினிக்கு கடைசியாக வெளியான 'அண்ணாத்த' படமும், நெல்சனுக்கு கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தாயரித்திருந்தது. இதில், பீஸ்ட் வெளியாவதற்கு முன்பே ரஜினி - நெல்சன் காம்போ உறுதியாகிவிட்டது. அதன்பின், பீஸ்ட் படத்தின் நெகடீவ் விமர்சனங்களால் நெல்சன் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டது எனலாம்.
இருப்பினும், ஜெயிலர் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதில், ரஜினிகாந்த் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் படத்தில் நீங்கா இடம்பிடிக்கும் 'ரெடின் கிங்ஸ்லி' இந்த படத்திலும் நடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், வசந்த் ரவி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். நடிகர் ரஜினி இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் படிக்க | சூர்யாவின் மிரட்டலான 'கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. முதலில் வெளியிடப்பட்ட 'காவாலா' பாடல் தமன்னாவின் நடனத்தாலும், அனிருத்தின் துள்ளலான இசையாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்றடைந்தது. ஆயிரக்கணக்கானோர் அந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ போட்டுவருவதை நீங்களே காண முடியும். அந்த அளவிற்கு 'காவாலா' பாடல் வரவேற்பை பெற்றுவிட்டது.
தொடர்ந்து, இரண்டாவதாக வெளியான 'Hukum' என்ற பாடல் ரஜினி ரசிகர்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாடலாக வந்துள்ளது. ஒவ்வொரு வரியிலும் ரஜினியை கொண்டாடி தீர்த்துள்ள அந்த பாடல் தற்போது இளைஞர்களின் ஹிட் லிஸ்டில் முதலில் உள்ளது எனலாம். காவாலா பாடலை அருண்ராஜா காமராஜா எழுதிய நிலையில், Hukum பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களும் படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டது.
இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியானது. வரும் ஜூலை 28ஆம் தேதி மாலை, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதான அரங்கத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதாவது, 28ஆம் தேதி நடக்கும் அந்த விழாவுக்கு பார்வையாளர்களாக ரசிகர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில்,"1000 இலவச பாஸ்கள் ரெடியா இருக்கு... நீங்களும் ரெடியா இருங்க... சந்திப்போம்" என குறிப்பிட்டுள்ளது. ஒரு இணையதள லிங்கை கொடுத்து, அதில் நாளை (ஜூலை 24) மதியம் 1 மணியில் இருந்து பாஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்வதன் மூலம் ஒருவருக்கு 2 பாஸ்கள் என 500 பேருக்கு இந்த பாஸ் வழங்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
FREE PASSES ready-ah irukku! Neengalum ready-ah irunga! Nalaiku PM santhipo #JailerAudioLaunch@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi #Jailer pic.twitter.com/h9cVfAZj6j
— Sun Pictures (@sunpictures) July 23, 2023
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரில் செல்ல விரும்புவோர் சன் பிக்சர்ஸ் கொடுத்துள்ள அந்த இணையதளத்திற்கு நாளை 1 மணியளவில் சென்று, தங்களது பாஸ்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். இசை வெளியீட்டு விழா, படத்தின் ரிலீஸிற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என்றாலும், நேரில் காண்பது வேற லெவல் அனுபவத்தை கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.
மேலும் படிக்க | கடல் கன்னியாக மாறிய கௌரி கிஷன்! இணையத்தை கலக்கும் படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ