அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!

Janhvi Kapoor Net Worth : மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2024, 05:59 PM IST
  • பல கோடிக்கு அதிபதியான ஸ்ரீதேவியின் மகள்
  • ஆடம்பர வீடு, கார்...
  • எத்தனை கோடி சொத்துகள்?
அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!  title=

Janhvi Kapoor Net Worth : தமிழ் திரையுலக ரசிகர்களின் மனங்களை ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்த நாயகி, ஸ்ரீதேவி. கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்தார். அப்படியே இவரை பாலிவுட்டும் அழைத்துக்கொள்ள அங்கும் மாபெரும் நடிகையாக வலம் வந்தார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி:

தமிழகத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, குழந்த நட்சத்திரமாக ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் பல்வேறு காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்தார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, மொத்தமாக திரையுலகை விட்டு விலகினார். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர். 

நடிகை ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டு தனது சகோதரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக துபாய்க்கு சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர் பிப்ரவரி 24ஆம் தேதி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர் இறப்பிற்கு காரணம் தற்செயலான நீரில் மூழ்கியதுதான் என கூறப்பட்டது. 

ஜான்வி கபூர்:

ஸ்ரீதேவியின் மறைவை ஒட்டி, அவரது குடும்பத்தினரை சுற்றியும் குறிப்பாக போனி கபூரை சுற்றியும் சாேகம் சூழ்ந்தது. அப்போது ஜான்வி கபூர் தனது முதல் பாலிவுட் படத்தில் கமிட் ஆனார். இவர் நடித்த முதல் படம், ‘தடக்’. இந்த படத்தில் அவர் இஷான் கத்தாருக்கு ஜாேடியாக நடித்திருந்தார். படம் பெரிதும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஜான்வியின் நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதையடுத்து, தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த ஜான்வி தற்போது இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். ஜான்விக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்தும் கூட பட வாய்ப்புகள் செல்கின்றன. 

மேலும் படிக்க | ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு திருமணமா?! மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு..யார் தெரியுமா?

சொத்து மதிப்பு..

இந்திய திரையுலகை சேர்ந்த பலரும், சினிமாவை தாண்டி சுயமாக அல்லது குடும்பமாக ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர். அது போல போனி கபூரும் பல்வேறு தொழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

நடிகை ஜான்வி கபூருக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே பல கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருகிறார் ஜான்வி. இவருக்கு தற்போது ரூ.65 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு ஒன்று இருக்கிறதாம். இதில் நீச்சல் குளம் உள்பட எக்கசக்க வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. 

அதே போல, மும்பையில் வசிக்கும் ஜான்விக்கு சென்னையிலும் ஒரு பங்களா வீடு சொந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடு கடற்கரையை நோக்கி இருப்பதாகவும் இதன் மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அது மட்டுமன்றி, ஜான்வி கபூர் பல ஆடம்பர கார்களையும் வைத்திருக்கிறார். இவர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் மேபீச் காரின் விலை மட்டும் 1.94 கோடி என கூறப்படுகிறது. இது மட்டுமன்றி அவருக்கு சொந்தமாக இன்னும் சில கார்களும் இருக்கிறதாம். கார்களின் மதிப்பு மட்டுமே பல கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, ஜான்வி ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். 

மேலும் படிக்க | Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News