வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 13, 2024, 04:07 PM IST
  • வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட்.
  • இவர் படத்தில் ரசிப்பதற்கான அம்சங்கள் எக்கச்சக்கமாக இருக்கும்.
  • அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம்.
வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா? title=

பொல்லாதவன், அசுரன், வடசென்னை, விசாரணை என தமிழ் சினிமாவிற்கே அடையாளம் தரும் வகையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். கோலிவுட் இயக்குநர்களுள் ரசிகர்கள் மனங்களில் நச்சென்று பதியும் வகையில் படங்களை இயக்கியவர்களுள் ஒருவர், வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது. 

பெயருக்கு ஏற்றார் போலவே, தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் வெற்றிப்படங்களாக மாற்றியவர், வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர தவறியதில்லை. வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன், அப்போதே பெரிய ஹீரோவாக இருந்த தனுஷின் வாழக்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அழுத்தமான, ஆழமான கருத்துகளை கூறும் படங்களை கொடுப்பதற்கு, தவறாத இயக்குநர் இவர். பாலு மகேந்திராவின் மாணவரான இவர், தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். மேலும் ஜனரஞ்சகமான கதை, கத்திய-ரத்தம் நிரம்பிய சண்டை காட்சிகள், பீப் போட்ட வசனங்கள் என இவர் படத்தில் ரசிப்பதற்கான அம்சங்கள் எக்கச்சக்கமாக இருக்கும். 

மேலும் படிக்க | இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் வெற்றிமாறன், படங்களை இயக்குவதை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அந்த வகையில் இவரது தயாரிப்பின் கீழ் பல படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் வடசென்னை. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர். மாபெரும் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளன.

இந்நிலையில் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் கூடிய விரைவில் வடசென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வடசென்னை 2 படத்திலிருந்து தனுஷ் வெளியேறியுள்ளதாகவும், வெற்றிமாறன் இப்படத்தை இயக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தற்போது வெற்றிமாறனின் துணை இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கப்போகிறார் என்கின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் ஆமீர் மற்றும் தனுஷ் இருவரும் நடித்த கதாபாத்திரங்களில் அவர்களுக்கு பதிலாக வேறொரு நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News