கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாற்று படம் "800" என்ற தலைப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இந்த கதை முரளிதரனின் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை பற்றி பேசியுள்ளது. ஒரு ஒடுக்கப்பட்ட தமிழனின் கதையை சொல்கிறது மற்றும் பேசப்படாத பல விஷயங்களை இந்த படம் பேசியுள்ளது. முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட்டில் மட்டும் இன்றி உலக கிரிக்கெட் வரலாற்றிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஒரு சாதாரண பந்து வீச்சாளராக இருந்து, எப்படி உலகின் மிகச்சிறந்த வீரராக மாறுகிறார், விளையாடுவதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள், விளையாட்டில் அவருக்கு கொடுமைப்படுத்துபவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இந்த படம் காட்டுகிறது. இது மனித நேயத்திற்கும் தேசியத்திற்கும் இடையிலான மோதலையும் ஆழமாக பேசுகிறது.
மேலும் படிக்க | லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு!
ஷெஹான் கருணாதிலக மற்றும் எம்.எஸ். ஸ்ரீபதி எழுதியுள்ள இந்த படத்தை ஸ்ரீபதி இயக்கி உள்ளார். மேலும், "800" படத்தில் மஹிமா நம்பியார், கிங் ரத்னம், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் மதுர் மிட்டல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ந்த படத்தை டிசம்பர் 2 முதல் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்த்து கொள்ளலாம். முதலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியானது, ஆனால் இதன் பின்பு ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் பலரது எதிர்ப்பு காரணமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகினார். மேலும் அந்த சமயங்களில், விஜய் சேதுபதி நடிப்பதால் தனது குடும்பம் அச்சுறுத்தப்பட்டதால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக முரளிதரன் கூறி உள்ளார். மேலும், படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி தான் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியை பரிந்துரை செய்ததாக முரளிதரன் கூறினார்.
“நான் ஐபிஎல் போட்டிகளுக்காக வந்திருந்த போது, விஜய் சேதுபதி படப்பிடிப்புக்காக அதே ஹோட்டலில் தங்கியிருந்ததாக எனது இயக்குநர் கூறினார். இதனால், ஒரு எதார்த்தமான சந்திப்பை ஏற்பாடு செய்ய முன்வந்தார், பின்பு இந்த படத்தில் நடிக்கும் படி கேட்டுக்கொண்டோம். ஆரம்பத்தில் இதற்கான பேச்சு வார்த்தைக்கு சம்பந்தம் தெரிவிக்கவில்லை என்றாலும், கிரிக்கெட் வீரராக என்னுடைய ரசிகராக இருந்ததால், விஜய் சேதுபதி சந்திக்க ஒப்புக்கொண்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, இரவு 8 மணிக்குப் பிறகு ஸ்கிரிப்ட்டின் விவரிப்புக்காக இரண்டு மணிநேரம் ஒதுக்கினார். அதைக் கேட்ட பிறகு, அவர் இந்த திரைப்படத்திற்கான உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தினார், இத்தகைய தனித்துவமான வாய்ப்பை தான் நழுவ விடமாட்டேன் என்றும் படத்தில் தானும் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். அதையடுத்து, அவருடன் ஒப்பந்தம் போட்டோம், மேலும் தயாரிப்பு நிறுவனமும் இணைந்தது ”என்று முரளிதரன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பின்பு நடந்த பிரச்சனைகளால் விஜய் சேதுபதி மிகுந்த அழுத்தத்தில் இருந்தார், மேலும் சிலர் என்னுடைய குடும்பத்தையும், விஜய் சேதுபதியின் குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார்கள். இந்த திரைப்படம் ஒரு விளையாட்டுத் திரைப்படம், இது அரசியல் அல்லது வேறு எதனுடனும் தொடர்புடையது அல்ல, ஆனால் இது ஒரு மனிதனின் உண்மைக் கதை" என்று முரளிதரன் கூறினார்.
மேலும் படிக்க | "தனி மனிதரைப் பற்றி தவறாக பேசினால் செருப்பால் அடிப்பார்கள்" - நடிகை ரோஜா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ