Ajith Kumar First Love Before Shalini : தமிழ் திரையுலகில், முக்கிய இடத்தை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார். தனது குடும்பத்தை எப்போதும் முதன்மையான இடத்தில் வைத்திருக்கும் இவர், சினிமாவை கூட இரண்டாம் பட்சமாகத்தான் பார்ப்பார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். காரணம், துபாயில் நடந்த 24H கார் ரேஸில் பங்கேற்ற இவரது அணி, 3வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பிறகு, அஜித்தும் ஷாலினியும் முத்தமிட்டுக்கொண்ட வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது. இந்த நிலையில், அஜித் ஷாலினிக்கு முன்னர் காதலித்த நடிகை குறித்த விவரம் வைரலாகி வருகிறது.
அஜித்-ஷாலினி காதல்:
அஜித்தும் ஷாலினியும் முதன்முதலாக சேர்ந்து நடித்த படம், அமர்க்களம். இந்த படத்தில் அஜித் ஒரு ரக்கட் பாயாக நடிக்க, அவரை காதலிக்கும் மென்மையான பெண்ணாக நடித்திருந்தார் ஷாலினி. கதையில் இருந்த காதல், இவர்கள் வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் காதலித்த இவர்கள் 2000ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர். இவர்களுக்கு அனெளஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகளும் உள்ளனர். திருமணமாகி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆன போதிலும் இருவரும் அதே இளமை மாறா காதலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித் ஷாலினிக்கு முன்பு காதலித்த நடிகை குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஷாலினிக்கு முன் அஜித் காதலித்த நடிகை:
இதை பார்த்தவுடன் பலருக்கு “என்னது அஜித் வேறொரு நடிகை காதலித்தாரா?” என்று ஷாக் ஆகி இருப்பீர்கள். காரணம் பலரும் அஜித் ஷாலினி குறித்து தான் பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். ஆனால் அஜித் முதலில் காதலித்த நடிகை ஹீரா ராஜகோபாலன். இவர்களின் காதல் ஆரம்பித்தது, “காதல் கோட்டை” படத்தில் இருந்துதான் எனக்கு கூறப்படுகிறது. இந்த படத்தில் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஆரம்பிக்க, அது இருவரும் சேர்ந்து நடித்த “தொடரும்” படத்திலும் தொடர்ந்தது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக காதலித்ததாகவும், சினிமா துறையில் இருக்கும் பலருக்கு இந்த விஷயம் தெரியும் என்றும் கூறப்படுகிறது. அஜித், அவ்வப்போது ஹீராவிற்கு காதல் கடிதங்களை எழுதி அனுப்பியதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரேக்-அப் எதனால்?
ஹீரா-அஜித்தின் காதல் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பிரச்சினைகளை சந்தித்துள்ளது. ஹீராவின் தாயார் தனது மகள் இவ்வளவு சிறிய வயதிலேயே சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் தன்னை முடித்துக் கொள்ளக் கூடாது என நினைத்திருக்கிறார். இதை எடுத்து ஹீராவின் அஜித்துடன் நடந்து கொண்ட விதமும் மாற ஆரம்பித்திருக்கிறது. இதனால் இருவரும் 1998 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது இது குறித்து அஜித் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் தங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும் தனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கு அவர், இப்போது அனைத்தும் மாறிவிட்டதாகவும் தான் காதலித்து நபர் அவர் இல்லை, சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் கூறியிருக்கிறார். இது, அப்போது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டதாம்.
ஹீரா இதயம், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, 1999ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
மேலும் படிக்க | 2010 கார் ரேஸில் அஜித் எப்படியிருக்காரு பாருங்க! வைரல் போட்டோஸ்..
மேலும் படிக்க | கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்! யாரெல்லாம் விஷ் பண்ணியிருக்காங்க தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ