Calorie Intake & Weight Loss: கலோரிகள் நமது உடல் செயல்படத் தேவையான ஆற்றல். எனவே ஆற்றல் குறையாமல் இருக்க, போதுமான அளவு கலோரிகள் உட்கொள்ள வேண்டும்.
பொதுவாக உடல் பருமனுக்கு கலோரிகளை காரணம் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் உடலுக்குத் தேவையான அளவு அதை உட்கொள்வது மிகவும் முக்கியம்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிவது முக்கியம்? அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கலோரி உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கலோரிகள் தேவை: உடலுக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பது வயது, பாலினம், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு கலோரிகள் தேவை.
கலோரிகளின் தேவையும் வயதும்: 19 முதல் 59 வயதுடைய ஒரு வயது வந்தவருக்கு ஒரு நாளைக்கு 1,600 முதல் 3,000 கிலோகலோரி தேவைப்படுகிறது. வயது வந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 முதல் 2,400 கிலோகலோரி தேவைப்படுகிறது. வயது வந்த ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 கிலோகலோரி தேவைப்படுகிறது.
ஊட்டச்சத்தும் கலோரிகளும்: நாம் உட்கொள்ளும் மொத்த கலோரிகளில், 45% முதல் 65% வரை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% முதல் 35% வரை கொழுப்பிலிருந்தும், 10% முதல் 35% வரை புரதத்திலிருந்தும் வர வேண்டும்.
ஆண்களுக்கு தேவையான கலோரிகள்: சுறுசுறுப்பான ஒரு பிஸியான வாழ்க்கை முறையை வழிநடத்தி வரும் வழக்கமான உடல் செயல்பாடுகளைச் கொண்ட நடுத்தர வயது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2500 கலோரிகள் தேவைப்படும்.
பெண்களுக்கு தேவையான கலோரிகள்: அதிக உடல் செயல்பாடுகளைக் கொண்ட வாழ்க்கை முறை உள்ள நடுத்த்ர வயது பெண்களுக்கு, இந்த தேவை சுமார் 1800 - 2000 கலோரிகள். உடல் செயல்பாடு குறைவாக இருக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், 1600 கலோரிகள் போதுமானது.
நீங்கள் எடை இழக்க விரும்பினால், உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், கலோரிகளை குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் எடை மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அதை அதிகரிக்க விரும்பினால், உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதற்கு அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.