Samantha Ruth Prabhu: அமெரிக்கா பறக்கும் சமந்தா; தோல் பிரச்னையா? என்ன ஆச்சி

Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப்பின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2022, 06:06 PM IST
  • சிகிக்சை பெற்ற சமந்தா
  • சமந்தா நடித்த படங்கள்
  • சமந்தாவின் தற்போதைய நிலை
Samantha Ruth Prabhu: அமெரிக்கா பறக்கும் சமந்தா; தோல் பிரச்னையா? என்ன ஆச்சி title=

Samantha Ruth Prabhu health treatment: சென்னையை சேர்ந்த சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்த அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களுக்கு பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவரது ரசிகர்களுமே அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவாகரத்தால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை பாதாளத்திற்கு செல்லும் என பலர் கூறினர்.

ஆனால், திருமண பந்த முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அவர் புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடினார். அவரது நடனத்தாலேயே உம் சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

மேலும் படிக்க | தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

இதற்கிடையே அவர் தி ஃபேமிலி மேன் சீரிஸிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி தமிழ், தெலுங்கு, பாலிவு ட் என ரவுண்ட் கட்டி நடிக்கும் சமந்தா அடுத்ததாக ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக யசோதா படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். மேலும் யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அதன் பணிகள் இன்னும் முடியாத காரணத்தினால் இந்த படம் வெளியீடு தாமதமாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், சாகுந்தலம் படம் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் நவம்பர் கூறப்படுகிறது.

இந்நிலையில் தோல் பிரச்சினைக்காக அமெரிக்காவில் சமந்தா சிகிச்சை பெற்ற தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகள் என்றும், அதில் உண்மையில்லை என்றும் சமந்தாவின் குழு அப்போதே தெளிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சமந்தாவின் மேலாளர் மகேந்திரா, அவர் முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்த உடல்நிலை பிரச்னையும் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சமந்தார். மேலும் அந்த டிசர்ட்டில் YOU’LL NEVER WALK ALONE எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் - மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News