குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள்.
அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த ஷிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். இதனிடையே இந்த ஷோவில் இருந்து தற்போது வரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதில் விஜே விஷால் கடந்த வாரம் தான் எலிமினேட் ஆனார்.
மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தில் தனுஷ்? வெளியானது உண்மை!
இந்த நிலையில் தற்போது இவரது எலிமினேஷன் குறித்து சர்ச்சையான பதிவுகள் வெளியாகி வருகின்றனர். அதன்படி கடந்த வார நிகழ்ச்சிய்ல் இருந்து விஜே விஷால் எலிமினேட் ஆனது அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினார்கள். மேலும் அவர் எலிமினேட் ஆனது குறித்து சிலர் ஷிவாங்கியை காப்பாற்றவே என்றும் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்தார் ஷிவாங்கி, அதில் நான் எப்படி சமைக்க முடியும் என்பதில் சீசன் தொடங்கியதில் இருந்து நிறைய குழப்பம் உள்ளது. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான். எங்களின் சிறந்ததை வெளிக்காட்டுவதற்காக தினசரி வழக்கத்தில் இருந்து பல தியாகங்கள் செய்கிறோம். கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க கடுமையாக உழைக்கிறோம்.
Okay….so a lot of confusion since the season has started on how I can cookI train 6 to 7 hours a day prior the shoot to learn .Not only me. All the cooks there. So much of sacrifice from the daily routine has been done to showcase our best.
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023
Comalis also prepare a lot for their getup! We work really hard in giving our best to entertain you all . Its our tension and work to look after . Please enjoy the show as it is . Its very easy to put down somebody’s hardwork .
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023
Godwilling if the day is good including my hardwork, my dish will comeout good. If its not my day despite the hardwork its not meant for me.Simple life logic. I have come to explore and enjoy!just have fun guysss
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023
இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு உழைப்பு வரும். அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மறுபுறம் தனது எலிமினேஷனுக்கு பின்னர் லைவ் ஒன்றில் வந்த விஷால் கூறியதாவது., இங்கு யாரும் புரோபோசனல் குக்ஸ் கிடையாது. அப்போது அந்த வேளையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து தான் எல்லாம். இதற்கு யாரும் காரணம் இல்லை. ஷிவாங்கியுடன் இப்படி ஒரு நட்பு ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை. இதை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி மட்டும் சொல்கிறேன் இது ஒரு சாதாரண விஷயம் மட்டுமே என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இனி வேற ரகம்! தனுஷ் நடிக்கும் அடுத்த 7 படங்களின் அப்டேட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ