National Award for Surya: 68வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சூரறைப்போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த கவுரவம் அவரை தேடி வந்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. சூரறைப் போற்று படத்தில் நடித்த அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
மேலும் படிக்க | நீண்ட காத்திருப்புக்கு பிறகு வந்தது - தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்
சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி பிரகாஷூக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படமாகவும் ‘சூரரைப் போற்று’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியானபோதே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படம் தேசிய விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 5 விருதுகளை குவித்திருக்கிறது சூரறைப் போற்று.
ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைக் கொண்டு, உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்திருக்கும் தேசிய விருதுகளுக்காக, தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர்.
68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 5 விருதுகளை சூரரைப் போற்று வென்றதையடுத்து, டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #SooraraiPottru ஹேஸ்டேக் மற்றும் #Suriya ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதுதவிர, வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது. யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்திற்கும் சிறந்த டையலாக் ரைட்டர் விருது கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ