வாரிசு Vijay கையில் இருக்கும் இந்த குழந்தை யாருடைய Varisu தெரியுமா

சமூக ஊடகங்கமான ட்விட்டரில் ஒரு புகைப்படும் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வாரிசு விஜய் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்த புகைப்படும் தற்போது வைரலாகி வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 1, 2022, 11:23 AM IST
  • வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்
  • வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும்
  • படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது
வாரிசு Vijay கையில் இருக்கும் இந்த குழந்தை யாருடைய Varisu தெரியுமா title=

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் படிக்க | தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? - அடுத்தடுத்து அப்டேட்!

இதற்கிடையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்தப் பாடலானது விஜய் பாடியதாக இருக்குமெனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும் தெரிகிறது. படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்த அறிவிப்பால் தற்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்த நிலையில் தற்போது சமூக ஊடகங்கமான ட்விட்டரில் ஒரு புகைப்படும் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வாரிசு விஜய் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்த புகைப்படும் தற்போது வைரலாகி வருகின்றது, மேலும் அந்த குழந்தை யாருடைய வாரிசுனு பலர் கேள்வி எழுப்பி உள்ளனர், அந்த குழந்தை வேறு யாருடைய குழந்தை இல்லை அது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான். தற்போது இந்த புகைப்படுத்தை பலர் ஷேர் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News