Himachal Pradesh Latest News: சிம்லாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பாஜக எம்பி கங்கனா ரனாவத், "இமாச்சலப் பிரதேசத்தில் ஊழல் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களை காலி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜக எம்பி கங்கனா ரனாவத் பேசியது..
காங்கிரஸ் கட்சி எப்படி இவ்வளவு பணத்தை தேர்தலுக்கு செலவிடுகிறது என்று நான் யோசித்தேன்.
நாங்கள் (பாஜக அரசு) நிவாரண நிதி கொடுத்தால், அது முதல்வர் நிவாரண நிதிக்கு செல்ல வேண்டும், ஆனால் அது சோனியா நிவாரண நிதிக்கு செல்கிறது.
காங்கிரஸ் அரசு மாநிலத்தை (இமாச்சலப் பிரதேசம்) பல தசாப்தங்கள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
இந்த காங்கிரஸ் அரசை மாநிலத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இமாச்சலப் பிரதேசம் சாலைகளில் உள்ள பள்ளங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளதாகவும், அந்த பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.
இமாச்சல் மாநிலத்தில் நிலவும் பொருளாதாரத்தால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்கு பென்சன் வழங்குவதில் தாமதமாகிறது.
தொடக்கப் பள்ளிகளில் விளையாட்டு வசதிகளும் குறைக்கப்படுவதாகவும், இதனால் இமாச்சலப் பிரதேச குழந்தைகளின் எதிர்காலத்துடன் காங்கிரஸ் விளையாடுகிறது.
மேலும் படிக்க - பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சி நடுங்குகிறது - அமித் ஷா!
மேலும் படிக்க - குளிக்கவே குளிக்காத கணவன்... நாத்தம் தாங்காமல் விவகாரத்து கேட்ட மனைவி - ஷாக் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ