Union Budget 2025: மத்திய அரசு தனது அடுத்த மத்திய பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறது. அடுத்த பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வரி விதிப்பு. பட்ஜெட்டுக்கு முன் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வருமான வரிச் சட்டங்களின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பைத் தயாரிக்க மிகக் குறைந்த காலமே உள்ளது. குறுகிய காலத்தில் வருமான வரித்துறை செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன.
Direct Tax Laws: நேரடி வரிச் சட்டங்கள்
நேரடி வரிச் சட்டங்களின் தற்போதைய விரிவான மறுஆய்வு, சட்டத் தடைகளைக் குறைப்பதிலும், அரசாங்கம் மற்றும் தொழில்துறையின் வழக்குச் சுமையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வருவாய்த் துறை தற்போது வழிமுறையை எளிமைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும் தற்போது வரி விகிதங்களில் எந்த மாற்றத்திற்கும் வரித்துறை ஆதரவாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
Central Board of Direct Taxes: ஆய்வின் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961 இன் மதிப்பாய்வில் சில அபராத விதிகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன. வழக்குகளைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த வழக்கு மேலாண்மையிலும் கவனம் செலுத்த வழிவகை செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் வருமான வரிச் சட்டங்களை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான நேரடி வரிகளின் மத்திய வாரியம் (CBDT) இந்த மதிப்பாய்வைச் செய்து வருகிறது. இதற்காக, நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் ஒரு உள் குழு அமைக்கப்பட்டது. இது 1961 இன் வருமான வரிச் சட்டத்தை விரிவான ஆய்வு செய்து வருகிறது.
எளிமையாக்கப்படும் விதிகள்
சட்ட விதிகளை எளிமையாக விளக்கி, அதன் மூலம் அவற்றை தெளிவுபடுத்தும் பணியில் குழு செயல்பட்டு வருகிறது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என இரு தரப்பும் வரி விதிப்பு முறைகளை புரிந்துகொள்ளும் செயல்முறையை எளிதாக்கும். மறுஆய்வு ஒரு புதிய சட்டத்தின் வடிவத்தில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது திருத்தங்கள் மூலமே முன்னெடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.
மதிப்பீட்டின் கீழ், TDS, TCS, மூலதன ஆதாயங்கள், வரி செலுத்துவோரின் வகைப்பாடு, வருமான ஆதாரம் போன்றவற்றின் விதிகளில் பெரிய தளர்வு அளிக்கப்படலாம் என்று வருமானத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 பட்ஜெட்டில் நேரடி வரிச் சட்டத்தின் இந்த மறுஆய்வில் வெளிவந்துள்ள புள்ளிகள் மற்றும் முன்மொழிவுகளை சேர்க்க அரசாங்கம் விரும்புகிறது.
The new Direct Tax Code 2025: மக்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்
- புதிய நேரடி வரிக் குறியீடு 2025 வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை இந்த திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
- வரிச் சட்டங்களின் சிக்கலைக் குறைப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுப்பதும், சட்ட இணக்கத்தை மேம்படுத்துவதும் இதன் முதன்மைக் குறிக்கோளாக இருக்கும்.
நேரடி வரிக் குறியீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கிய மாற்றங்கள்:
- பிரிவுகளின் (Sections) எண்ணிக்கையைக் குறைத்து கூடுதல் அட்டவணைகளை (Schedules) உருவாக்கியதன் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை எளிதாக்குதல்.
- இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வரி செலுத்துவோர் வகைப்பாட்டை எளிதாக்குதல்.
- ROR மற்றும் RNOR போன்ற வகைகளை நீக்குதல்.
- குறைகளை சரிசெய்து, நியாயமான வரி முறையை உருவாக்குவதற்கு தேவையற்ற பெரும்பாலான விலக்குகளை நீக்குதல்.
- கிட்டத்தட்ட அனைத்து வருமான வகைகளையும் உள்ளடக்கும் வகையில் TDS/TCS வரம்பை விரிவுபடுத்துதல்.
மூலதன ஆதாயங்கள் மீதான வரி
இதனுடன், வழக்கமான வரி செலுத்துதலை ஊக்குவிக்கவும், வரி ஏய்ப்பைக் குறைக்கவும், மூலதன ஆதாயங்கள் வழக்கமான வருமானமாக வரி விதிக்கப்படுகின்றன. இது சிலருக்கு வரிகளை அதிகரிக்கலாம், ஆனால் இது அனைத்து வகையான வருமானங்களுக்கும் ஒரே மாதிரியான வரி வகையை உறுதி செய்யும்.
Direct Tax Code: நேரடி வரிக் குறியீடு
ஒட்டுமொத்தமாக, புதிய நேரடி வரிக் குறியீடு இந்தியாவில் மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான வரி முறையை உருவாக்குவதற்கான சாதகமான படியாகக் கருதப்படுகிறது. நவீன பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வரிக் கட்டமைப்பை மாற்றியமைப்பது, வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் வரிச்சுமையை நியாயமான வகையில் விநியோகம் செய்வது போன்ற விஷயங்களுக்கு அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ