Saif Ali Khan Incident: மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர் சைஃப் அலி கான் வசித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளார்.
அட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மகன்
இதில் சைஃப் அலி கான் படுகாயம் அடைந்தார். மொத்தம் 6 முறை அந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியுள்ளார். குறிப்பாக அவரது முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் இப்ராஹிம் ஆட்டோ மூலம் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது சைஃப் அலி கான் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: பொங்கல் வின்னர் யார்? வெளியான 5 படங்களில் ‘இது’தான் வசூலில் டாப்!!
வீட்டுப் பணிப்பெண்களிடம் விசாரணை
இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சம்பவம் அரங்கேறிய 2 மணி நேரத்திற்கு முன்பாக வீட்டிற்குள் யாரும் சென்றதாக அடையாளங்கள் தென்படவில்லை. எனவே திருட வந்தவன் முன்கூட்டியே வீட்டிற்குள் சென்று பதுங்கி இருந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேரை அழைத்து விசாரணை நடத்தினர்.
என்ன நடந்தது?
சம்பவம் நடந்த முந்திய இரவு அதாவது 15ஆம் தேதி இரவு 11 மணி அளவில் சைஃப் அலி கானின் இளைய மகன் ஜெய் பாபாவை(4) படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டு சக ஊழியருடன் தங்கச் சென்றதாக பணிப்பெண் பிலிப் தெரிவித்துள்ளார்.
பின்னர் அதிகாலையில் சத்தம் கேட்டு விழித்தெழுந்த போது மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு கம்புடனும் நீண்ட கத்தியுடனும் இருந்ததை பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என கேட்ட நிலையில், தான் சத்தம் போட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சத்தம் கேட்டு சைஃப் அலி கான் வந்து அந்த நபருடன் சண்டையிட்டபோது அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் மற்றும் சிசிடிவி கேமராவில் சிக்கிய புகைப்படத்தை வைத்து போலீசார் தனிப்படை அமைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்வரிடம் கோரிக்கை
இச்சம்பவத்தால் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாந்த்ராவிதான் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய நடிகை, நடிகர்கள் வசித்து வருகின்றனர். எனவே பலத்த பாதுகாப்பு வேண்டும் என்று நடிகை பூஜா பட் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிங்க: கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ