Resul Pookutty Criticizes Kanguva Movie : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யா, கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அதன் பிறகு தற்போது தான் அவரது பெரிய படமான கங்குவா தியேட்டர்களில் வெளியானது. தமிழகம் மட்டுமன்றி பத்து மொழிகளில் பான்-இந்திய அளவில் வெளியான கங்குவா படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.
கங்குவா திரைப்படம்:
சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக கங்குவா படத்தில் நடித்திருக்கிறார், சூர்யா. 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு காலதாமதமாக முடிவடைந்தாலும், இதன் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த படத்தில் சூர்யா பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி வருகிறார். வில்லனாக பாபி டியோல் இடம் பெற்றிருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படம், சுமார் 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நவம்பர் 14ஆம் தேதி நேற்று படம் வெளியானதை தொடர்ந்து, பலர் ஆரம்பத்துடன் தேர்தலுக்கு சென்று படம் பார்த்தனர். ஆனால் அப்படி சென்றவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். காரணம், படத்தில் கதையே இல்லை என்றும், காதை கிழிக்கும் வகையில் பின்னணி இசை இருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின.
படத்தின் இசையை விமர்சித்த ஆஸ்கர் விருது வென்றவர்:
கேரளாவை சேர்ந்த இந்திய திரைப்பட சவுண்ட் இன்ஜினியர், ரெசூல் பூக்குட்டி. இவர், 2009ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதினை வென்றிரு்ககிறார். கங்குவா படத்தைப் பார்த்த இவர், இந்த படத்தின் இசை குறித்து விமர்சனங்களை பார்த்து விட்டு பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | கங்குவா படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!! வயிறு குலுங்க சிரிக்க வைரல் மீம்ஸ்..
கங்குவா படத்தில் இடம்பெற்றிருந்த பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் வசனங்கள் அதிக சத்தத்துடன் இருப்பதால் படம் பார்க்க வருபவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் இதுக்கெடுத்து விடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்த ஒரு போட்டோ பதிவினை வெளியிட்டு இருக்கும் அவர் கேப்ஷனில், என்னுடைய ஒரு நண்பர், ஒரு ரீ-ரிக்கார்டிங் மிக்ஸர் எனக்கு இந்த பதிவை அனுப்பினார். இது போன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. எங்கள் கலைத்திறன் இது போன்ற வேலைகளில் சிக்கிக்கொள்வதூ யார் குற்றம்?!” என்று கேட்டிருக்கிறார்.
மேலும், “படம் பார்க்க வருபவர்கள் தலை வலியுடன் திரும்ப சென்றால், எப்படி அவர்களுக்கு மீண்டும் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும்?” என்று மன வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
ரசிகர்கள் வருத்தம்:
சூர்யாவின் படம் ஒன்று, 2 வருடங்கள் கழித்து தியேட்டர்களில் வெளியாவப்போவதை நினைத்து பலர் மகிழ்ச்சியில் இருந்தனர். குறிப்பாக கேரளாவில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகம். முதல் நாள் முதல் காட்சி பார்த்த அவர்கள், காசு கொடுத்து படம் பார்த்ததே வேஸ்ட் என்றெல்லாம் தங்கள் மன வருத்தங்களை சில ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இப்படி, கடும் உழைப்பில் வெளியான படம் இது போன்ற விமர்சனங்களை சந்தித்து வருவது, படக்குழுவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Kanguva Review: 2000 கோடி வசூல் செய்யுமா கங்குவா? திரைவிமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ