செல்பி எடுத்தியே இது வேணாமா? சரி போ போ.. வைரலாகும் விஜய்யின் வீடியோ

Vijay Cute Reaction Video: நெல்லையில் நிவாரணம் வழங்கிய பின் விஜய், இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 30, 2023, 05:01 PM IST
  • நெல்லையில் நிவாரணம் வழங்கிய விஜய்.
  • விஜய், இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
செல்பி எடுத்தியே இது வேணாமா? சரி போ போ.. வைரலாகும் விஜய்யின் வீடியோ title=

பொதுமக்களுக்கு நிவாரண உதவி: தளபதி விஜய் திருநெல்வேலியில் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கும் பணிகளை துவங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் மட்டுமின்றி பல தன்னார்வலர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினரும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலும், கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் பல நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். அதில் நடிகர் விஜயும் தனது மக்கள் மன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் எனவும் சில நாள்கள் முன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களக்கு நிவாரணம் அளிக்கும் நிகழ்ச்சி விஜய் மக்கள் மன்றம் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். முன்னதாக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், பின்னர் சாலை மூலம் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். மேலும், உயிரிழந்தோர், வீடு இழந்தோர் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கிட்டதட்ட 1,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவியை விஜய் வழங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 வழங்கினார். இதில் தூத்துக்குடி மாநகர பகுதியை சார்ந்த 500 பேர், புறநகரை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என பல்வேறு தரப்பில் பாதிக்கப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 400 பேரை தேர்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க | Salaar OTT Release Date: ஓடிடியில் ரிலீசாகும் சலார்... எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

அப்போது நடிகர் விஜய் (Actor Vijay) தனது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் உடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார், இதில் இளைஞர்கள் கையசைத்தும், கத்தியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் பெண் ஒருவர் நடிகர் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு நிவாரண உதவியை பெறாமல் சென்ற போது, அவரை விஜய் கூப்பிட்டு 'Selfie எடுத்தியே இது வேணாமா? என்று கேட்க, அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று கூற, விஜய் அதற்கு ஓகே போ போ".. என்று கூறியது செம கியூட் ஆக இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணாக்கர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு நடிகர் விஜய் உதவித்தொகை வழங்கினார். விஜயின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியில் பங்கற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆகியோருக்கு விருந்து பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | bigg boss 7 elimination: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் போகும் முக்கிய போட்டியாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News