Leo Box Office Collection: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள லியோ ரிலீஸுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளது. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் வெளிநாடுகளில் அமோக வியாபாரம் செய்ததால், அட்வான்ஸ் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஏற்கனவே UK பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிக புக்கிங் ஆனா தமிழ் படமாக மாறி வருகிறது.
மேலும் படிக்க | முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்...கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றான லியோ, வெளிநாட்டு வியாபாரத்தில் அட்வான்ஸ் விற்பனையில் புதிய வணிக சாதனை பதிவு செய்துள்ளது குறிப்பாக இங்கிலாந்தில். இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் மற்ற தமிழ்ப் பெரிய படங்களான பொன்னியின் செல்வன்-1, ஜெயிலர் மற்றும் பொன்னியின் செல்வன்-2 போன்ற படங்களை லியோ மிஞ்சியுள்ளது. வர்த்தக வலைத்தளமான sacnilkன் அறிக்கையின்படி, லியோ படம் அதன் முதல் நாளில் சுமார் ரூ. 2.55 கோடி (250.5K அல்லது $305K) முன்கூட்டிய மொத்த வசூலை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் நாளில் 250K வசூலித்ததை விட இது அதிகம். இப்போது அதிக வசூலில் மூன்றாவது பெரிய தமிழ் படமாக இருக்கும் PS-2, முதல் நாளில் 228.5K வசூலித்தது, அதைத் தொடர்ந்து ஜெய்லர் 222.8K மற்றும் Beast 203.2K அடுத்தடுத்த இடங்கில் உள்ளது.
UK பாக்ஸ் ஆபிஸில் பதானை மிஞ்சிய லியோ
லியோ படம் இங்கிலாந்தில் சுமார் 30,000 டிக்கெட்டுகளை முன்கூட்டியே விற்பனை செய்துள்ளது. சுவாரஸ்யமாக, அங்கு அதிக டிக்கெட் விற்பனை ஆனா படங்களில் ஷாருக்கானின் பதான் உள்ளது, இந்நிலையில் விஜய்யின் லியோ படம் விரைவில் அதை வீழ்த்தி இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் எல்லா காலத்திலும் மிகப்பெரிய இந்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 காலத்திலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய மாஸ்டர் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் நடித்துள்ள இரண்டாவது படம் லியோ ஆகும். கைதி மற்றும் விக்ரமுக்கு பிறகு பிரபலமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இந்த படம் இடம் பெறுமா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
லியோ படத்தில் விஜய்யைத் தவிர, சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்திலும், த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாகவும், அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து அவரது 171வது படத்தை இயக்க உள்ளார். இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்ஷனா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ