Sawadeeka Vidaamuyarchi Movie Song Meaning : கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், சமீபத்தில் நடித்து முடித்த படம், விடாமுயற்சி. இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி இருக்கிறது.
முதல் சிங்கிள் ரிலீஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம், அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் மெதுவாக நடந்திருந்தாலும், இதன் அப்டேட்டுகளை அடுத்தடுத்து சொன்ன நேரத்தில் தாமதமின்றி கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில், டிசம்பர் 27ஆம் தேதியான இன்று அப்படத்தின் முதல் சிங்கிளான Sawadeeka பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. சொன்னது போலவே, முதல் சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.
Sawadeeka என்றால் என்ன?
தமிழில், கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் பாடல்களில் பிற மொழி கலப்புகளும் இருக்கின்றன. அந்த வகையில், விடாமுயற்சி திரைப்படத்தையும் அந்த மொழி கலப்பு விட்டு வைக்கவில்லை. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல், கேட்பதற்கும் பார்பதற்கும் ட்ரிப்பிங்காக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் இருக்கும் ஒரே சந்தேகம், Sawadeeka என்ற வார்த்தைக்கு அர்த்தம்தான்.
Sawadeeka என்றால், தாய்லாந்து மொழியில் “வணக்கம்” என்று அர்த்தமாம். ஆங்கிலத்தில் Hi, Hello என்று தன்மையாக கூறுவோம் அல்லவா? அது போன்ற ஒரு வார்த்தைதான், Sawadeeka. தாய்லாந்து மொழி பேசும் பெண்கள், பிறரிடம் தன்மையாக வணக்கம் சொல்வதற்கு உபயோகிக்கும் வார்த்தைதான், இந்த Sawadeeka என்ற வார்த்தைக்கான அர்த்தமாகும்.
ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
கடந்த சில ஆண்டுகளாகவே, அஜித்தின் படங்களும் சரி, அவர் பட பாடல்களும் சரி, பெரிதாக ரசிகர்கள் ஈர்க்காமல் இருந்தது. ஆனால், விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான போது அனைவருக்குள்ளும ஒரு சிறு நம்பிக்கை எட்டிப்பார்த்தது. இருப்பினும் பாடல்களை நினைத்து பயந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அனைவர் வாயிலும் தவழும் அளவிற்கு ட்ரெண்ட் ஆகும் பாடலை அனிருத் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
I'm not gonna comment on the song, but seeing AK dance, made my heart light and vibe#AjithKumar #VidaaMuyarchiFirstSingle https://t.co/eB3Jcdjj7y
— Reema (@reemathangs19) December 27, 2024
Thalaaaaaa
Ithuvae padam paartha thirpthi#AjithKumar #VidaaMuyarchiFirstSingle #Sawaadeeka #GoodBadUgly pic.twitter.com/D1GXq8c5In— Mr. AK (@ErodeCommanMan) December 27, 2024
அனிருத், தான் இசையமைக்கும் சில படங்களில் கேமியோ ரோலில் வருவதுண்டு. இந்த பாடலிலும் அப்படி ஒரு தோற்றத்தில் வருகிறார். மேலும், இந்த பாடலில் இப்போது வைரல் ஆடியோவாக இருக்கும் “இருங்க பாய்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இளசுகளிடையே இப்பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Thug Life என்றால் என்ன? கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?
பட ரிலீஸ் எப்போது?
அஜித் நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு துணிவு படம் வெளியானது. அதன் பிறகு, ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடியவே ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையே பைக் டூர் கிளம்பிய அஜித், குட் பேட் அக்லி படத்திலும் கமிட் ஆனார். விடாமுயற்சி படம் போல அல்லாமல், இந்த படத்தின் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டன.
ஆனால், ரிலீஸ் தேதியில் இரு படங்களில் எதை முதலில் வெளியிடுவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இறுதியில், விடாமுயற்சி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனராம். இந்த படம், பொங்கல் ரிலீஸாக ஜனவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல குட் பேட் அக்லி படம், மே மாதத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Jailer 2nd Single: ஜெயிலர் 2வது சிங்கிள் அப்டேட்-‘Tiger Ka Hukum’ என்றால் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ