தமிழ் பேசும் காஷ்மீரி! அமரன் படத்தில் வந்த க்யூட் பாய் Waheed Ahmed யார் தெரியுமா?
Amaran Character Waheed Ahmed Actor Umair : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அமரன் படத்தில் வஹீத் அஹ்மத் என்ற கதாப்பாத்திரம் இடம் பெற்றிருந்தது. இவர் யார் தெரியுமா?
Written by -
Yuvashree| Last Updated : Nov 6, 2024, 07:06 PM IST
Amaran Character Waheed Ahmed Actor Umair : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஒரு பக்கம் கவனம் ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் பெண்களின் மனங்களை கவர்ந்தவர், Waheed Ahmed என்ற கதாப்பாத்திரம். இவருடன், நம் ஊடகம் சார்பாக ஒரு நேர்காணல் நடந்தது. அதில், தன்னைப்பற்றிய விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த Waheed Ahmed?
அமரன் படம் பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த படத்தில் தமிழ் பேசும் ஒரு இந்திய ராணுவ வீரரை காாட்டியிருப்பர். அவர் பெயர் Waheed Ahmed என்றும் கூறியிருப்பர். அதிலும், கலவர பூமியாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்தவராக இருப்பார் அந்த ராணுவ வீரர். இதில் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த வஹீத், காஷ்மீரை சேர்ந்தவராக இருந்தாலும் நன்றாக தமிழ் பேச தெரிந்தவராக இருப்பார். இந்த கதாப்பாத்திரம் உண்மையானதுதான். இதில் நடித்தவர், பார்ப்பதற்கு பளபளவென இருந்ததால், பெண்கள் பலர், “யார் இந்த பையன்?” என தேட ஆரம்பித்தர். அப்படி, நம் ஊடகப்பிரிவில் இருந்தும் இவரை ஆராய்ந்து இன்டர்வியூ எடுத்தோம்.
உண்மையான பெயர்..பிறந்து வளர்ந்த இடம்..
Waheed Ahmed கதாப்பாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர், Umair Ibn Lateef. காஷ்மீரை சேர்ந்த இவர், அங்கேயே தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, 18 வயதில் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். இங்கிருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். அந்த 2 ஆண்டில்தான் தனது நண்பர்கள் மூலம் நன்கு தமிழ் பேச கற்றுக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே பிரபலமானவர்..
உமைர், அமரன் படத்தில் நடித்த பின்புதான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். ஆனால், காஷ்மீரில் ஏற்கனவே அவர் பிரபலமானவராக இருக்கிறார். தனக்கென தனியாக ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் இவர், அதில் தனது மாெழியில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று vlog செய்து வருகிறார்.
சினிமாவிற்கு வந்தது ஏன்?
உமைரின் தந்தை காஷ்மீர் சில்க் உள்பட பல பொருட்களை விற்கும் கடையை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறார். இந்த கடையை அவ்வப்போது பார்த்துக்கொண்ட உமைர், ஒரு பிரபல நிறுவனத்திற்காக மாடலிங்கும் செய்து கொடுத்திருக்கிறார். அதன் பிறகு, தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனது சொந்த ஊரான காஷ்மீருக்கே சென்றிருக்கிறார்.
காஷ்மீருக்கு சென்ற உமைர், தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். அப்போதுதான் அமரன் படத்தின் உதவி இயக்குநர்கள் இவரைத்தேடி கண்டுப்பிடித்து கொண்டு வந்து இயக்குநர் முன்பு நிறுத்தி வைத்திருக்கின்றனர். அமரன் படத்திற்காக உடலை ட்ரெயினிங் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இதையடுத்து 3 மாதத்திற்குள் டிரான்ஸ்பார்ம் ஆகியிருக்கிறார் உமைர். படத்தில் இவரது கதாப்பாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் அதற்கு நல்ல வெயிட்டேஜ் இருந்தது. இதுதான், இவரை இந்த அளவிற்கு பிரபலமாக்கியிருக்கிறது.
வயது என்ன?
உமைர், 1999ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருக்கு தற்போது 25 வயதாகிறதாம். அமரன் படத்திற்கு பிறகு தமிழகத்தில் பிரபலமாகிவிட்ட இவர், பட ரிலீஸிற்கு பிறகு பல யூடியூப் சேனல்களுக்கு சுழன்று சுழன்று பேட்டி கொடுத்து வருகிறார். உமைர், பல உயரத்தை தொடர ஜீ தமிழ் சார்பாக வாழ்த்தி அனுப்பினோம்.
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.