2023 சூப்பர் ஹிட் தென்னிந்திய பாடல்கள்: நம்பர் 1 இடத்தில் தமிழ் படம்!

Top 2023 Albums of South Indian Cinema: தென்னிந்திய சினிமாவில் இந்த வருடம் சூப்பர் ஹிட் அடித்த பாடல்களின் லிஸ்டில், தமிழ் படத்தின் பாடல்கள் முதலிடத்தை பிடித்துள்ளது. 

2023ஆம் வருடம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் ஹிட் அடித்த படங்கள், பாடல்கள், டாப் இடத்திற்கு சென்ற நடிகர்-நடிகைகள் என அனைத்திற்கும் ஒரு பட்டியல் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இந்த வருடத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்த பாடல்களை இங்கு பார்க்கலாம். 

1 /7

தென்னிந்திய சினிமாவில் மக்களின் மனம் கவர்ந்த பாடல்கள் குறித்த கணக்கெடுபினை, பிரபல ஊடகம் ஒன்று எடுத்தது. இதில், சினிமா ரசிகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில், வரிசையாக மக்களின் மனம் கவர்ந்த தென்னிந்திய சினிமா படங்களின் பாடல்களை பார்ப்போம். 

2 /7

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் வந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அலப்பர கெளப்புறோம் மற்றும் ஜுஜூபீ ஆகிய பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன. இப்படத்தின் ஆல்பம், ரசிகர்கள் மத்தியில் 6வது இடத்தை பிடித்துள்ளது. 

3 /7

சமந்தா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்திருந்த காதல்-டிராமாதான் குஷி படம். இந்த படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக, ‘நா ரோஜா நூவே’ என்று மணிரத்னமின் படங்களை வைத்து எழுதப்பட்டிருந்த பாடல், மக்களின் நாபிக்கமலத்தில் நடனமாடியது. இந்த படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். இது, ரசிகர்கள் மத்தியில் 5வது இடத்தை பிடித்துள்ளது. 

4 /7

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை போட்ட படம், ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ். இதில், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ‘மாமதுர’ பாடல் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. ரசிகர்கள், இந்த படத்தை தங்கள் மனங்களில் 4வது இடத்தில் வைத்துள்ளனர். 

5 /7

சப்த சாகரதாச்சே எல்லோ-சைட் ஏ படம், மக்களின் சமீபத்திய ஃபேவரட் ஆகும். இதில், ரக்‌ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சரண் ராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம், மக்களின் வாக்கெடுப்பின் படி சிறந்த பாடல்களுக்கான 3வது இடத்தில் உள்ளது. 

6 /7

நானி-மிருணாள் தாகூர் நடிப்பில் ரொமாண்டிக்-ட்ராமாவாக வெளியான படம், ஹை நன்னா. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படம், சிறந்த பாடலுக்கான பட்டியலில் 2வது இடத்தை பெற்றுள்ளது. 

7 /7

இந்த 2023ஆம் வருடமே அனிருத்தின் வருடமாக அமைந்தது. அவருக்கு பெரிய ஹிட் அடித்த ஆல்பங்களுள் ஒன்று, லியோ. இதில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே ஹிட்தான். விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம்தான் மக்களின் மனங்களிலும், இந்த பட்டியலிலும் டாப் இடத்தை பெற்றுள்ளது.